November 25, 2024
  • November 25, 2024
Breaking News
June 25, 2020

வட சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ அணிவகுப்பு வீடியோ

By 0 810 Views

சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814ஆக அதிகரித்துள்ளது.

இதில் ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அது அத்தனையும் பலனளிக்கவில்லை.

இதனால் தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்திய கமாண்டோ படயினர், வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து அனுப்பினர்.

சென்னை மாநகரில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுக்கு ராயபுரம் மண்டலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,607-ஆக அதிகரித்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5,355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வடசென்னையில் கொரோனா பரவல் அதிகமாகி இருப்பதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கமாண்டோ படை தற்போது களமிறக்கப்பட்டுள்ளது.