நட்பையும், காதலையும் சரியாகச் சொல்லும் படங்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை. அந்த வகையில் இந்த ‘நேத்ரா’ படமும் அதையே சொல்லி களம் இறங்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடிகராகிவிட்ட இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படம் அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி அவருக்கு வித்தியாசமான களத்தைத் தந்திருக்கிறது. கதை முழுவதும் வெளிநாட்டில்தான் நடக்கிறது. ஆனால்,...
சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தவர் ‘அடா சர்மா’. இந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏற்கனவே தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் இப்போதைய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக இருந்தார். சிறந்த நடன மணியாக...
கடந்த இரு தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகும் ‘வர்மா’ படம் திருப்தி தராததால் அதனை வெளியிடாமல் குப்பையில் போடுவதாக தயாரிப்பு நிறுவனமான ‘இ4 என்டர்டெயின்மென்ட்’ அறிவித்தது. இச்செய்தி தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலாவுக்கு ஆதரவாக இயக்குநர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியும் நடந்தது. படத்தில் என்ன குறை என்பதை...
‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா...
சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண் ஒருவர் புனைபெயரில் இயக்கும் ’90 எம்எல்’...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர். வந்தவர்களுக்கு...