March 24, 2025
  • March 24, 2025
Breaking News
February 10, 2019

அடா சர்மாவின் அபார திறமையை பாருங்க வீடியோ

By 0 930 Views

சமீபத்தில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தவர் ‘அடா சர்மா’. இந்தி நடிகையான இவர், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஏற்கனவே தமிழில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் இப்போதைய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக இருந்தார்.

சிறந்த நடன மணியாக இருப்பவருக்கு அதைத் தாண்டிய பல திறமைகள் இருக்கின்றன. அதில் ஸ்போர்ட்ஸும் உண்டு. ‘மல்லகம்ப்’ என்றொரு விளையாட்டு ஸ்போர்ட்ஸில் உண்டு. கயிற்றை உயரே கட்டி அதில் நம் உடம்பை ஏற்றி வித்தைகள் செய்வதுதான் அது.

அதில் தேர்ந்தவர் ‘அடா சர்மா’. அவர் நேற்று வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் இந்த ‘மல்லகம்ப்’ பயிற்சி இடம் பெற்றிருக்கிறது. கயிற்றில் அநாயசமாக ஏறி அதையே படுக்கை போலாக்கி படுத்துக் காண்பிக்கிறார். அந்த அதிசயத்தைப் பாருங்கள். 

விரைவில் ‘மல்லகம்ப்’ ஒலிம்பிக்ஸில் இடம்பெறவிருக்கிறது என்ற குறிப்புடன் அடா சர்மா வெளியிட்டிருக்கும் வீடியோவைப் பார்த்தால் அவருக்கு ஒலிம்பிக்ஸிலும் இடம் இருப்பதாகத் தோன்றுகிறது.

பதக்கம் பெற வாழ்த்துகள் அடா..!