இரட்டை ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகக் களமிறங்கி ‘பாலைவனச் சோலை’ படத்தை அதே இரட்டையர்களில் ஒருவராக இருந்தி இயக்கி இப்போது டிவி சீரியல்களில் நடிகராக அறியப்படும் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 62. சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் படித்த ராஜசேகர், தனது நண்பர் ராபர்ட் உடன்...
கடந்த ‘பிச்சைக்காரனி’ல் அம்மா சென்டிமென்டைப் போட்டுத்தாக்கி தமிழிலும், தெலுங்கிலும் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இதில் ‘மாமன், மச்சான்’ என்று இதில் ஒரு சென்டிமென்ட்டைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி. அக்கா, தம்பியான லிஜா மேனனும், ஜி.வி.பிரகாஷும் பெற்றோரின்றி வளர்வதால் ஒருவருக்கொருவரே அம்மா, அப்பாவுமாக வாழ்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் வளர்ந்து பைக் ரேஸ் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அப்படி...
ஜி.வி.பிரகாஷ்-ஆர்.பார்த்திபன் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்தைத் தயாரித்த எம்.சரவணனின் திருமணம் இன்று நடைபெற்றது. அவர் ஷ்ராவ்யா கீர்த்தனாவை மணந்தார். இந்த திருமணத்தில் நடிகர்கள் ஆர்.பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ், ‘பிக் பாஸ்’ சரவணன், ‘பிக் பாஸ்’ மதுமிதா, ஆர்.கே.சுரேஷ், பாலசரவணன், சரவண சக்தி, இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், ஷண்முகம், வினியோகஸ்தர் படூர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்....
ஒரு படத்தின் முதல் ஷாட்டே அது எப்படிப்பட்ட படம் என்று சொல்லிவிடும் என்பார்கள். ஆனால், அந்த இலக்கணமெல்லாம் இதுபோன்ற ‘ஜல்லியடித்து ஜாம் தடவும்’ படத்துக்குப் பொருந்தாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். முதல் ஷாட்டில் ஆலைக் கழிவில் சிக்கி சிதைந்து கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் கூட செய்யாமல் சிக்கன் ஃபிரை செய்வதைக்...
கடவுள், மிருகம் என்ற இரண்டு மனித நிலைகளையும் தனித்தனிப் பாத்திரங்களாக்கி இரண்டு நிலைகளும் இந்த சமூகத்தில் என்ன அனுபவத்துக்கு ஆட்படுகின்றன என்று ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். மிருக நிலைக்கு ‘மகா’ என் கிற வன்மம் மிகுந்த பாத்திரத்தில் ஒரு வேடமும், முனி என்கிற ஆன்மிகப் பாத்திரத்தில் இன்னொரு வேடமுமாக ஆர்யாவுக்குக் கொடுத்து...
அஜித், விஜய், விஜயகாந்த், பிரபுதேவா உள்ளிட்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் முதல் பலருக்கும் இதுவரை 800 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள பிரபல பாடலாசிரியர் முத்துவிஜயன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 48. ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…’, ‘மேகமாய் வந்துபோகிறேன்…’ உள்ளிட்ட காதல் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த கவிஞர்.முத்துவிஜயன்....