September 16, 2024
  • September 16, 2024
Breaking News
  • Home
  • பல்சுவை
  • இந்தியாவின் மிகப்பெரிய ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப்பை சென்னை வரவேற்கிறது
August 5, 2024

இந்தியாவின் மிகப்பெரிய ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப்பை சென்னை வரவேற்கிறது

By 0 119 Views

~ விதிவிலக்கான வடிவமைப்பு, ஒரு முழு அளவிலான அம்சங்கள் மற்றும் நிகரற்ற செயல்திறன் ஆகிய மூன்று அத்தியாவசிய காரணிகளை குறைபாடாற்ற முறையில் ஒருங்கிணைக்கின்ற சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் ஐ காட்சிப்படுத்தியது ~

சென்னை, ஆகஸ்ட் 03, 2024 – பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களுக்குப் புத்தாக்கம் அளிப்பதற்காகப் பெயர் பெற்ற நாட்டின் இளம் மோட்டார் சைக்கிள் பிராண்டான ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ், இந்தியாவில் அதன் மிகப்பெரிய டீலர்ஷிப்பை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த புதிய அதிநவீன டீலர்ஷிப், ஒரு பரந்த அளவிலான சேவைகள் மற்றும் ஒரு மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகின்ற வகையில் இந்த பிராந்தியத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு ஒரு முக்கிய அடையாளமாக அமைகிறது.

6,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ள புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன வசதியான, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள ஸ்வஸ்திக் மோட்டார், ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்களின் முழு வரம்பையும் வழங்கும். மிகச்சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை இந்த விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த டீலர்ஷிப் ஆனது, உகந்த வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்வதற்காக உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகின்ற ஒரு அர்ப்பணிக்கப்பட்ட சேவை மையத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
ஜாவாயெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஆஷிஷ் சிங் ஜோஷி இந்த தொடக்க விழாவில் பேசுகையில், “நாட்டிலேயே மிகப்பெரிய ஜாவாயெஸ்டி டீலர்ஷிப்பை சென்னைக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

தமிழ்நாடு மாநிலம் எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தையாக இருக்கிறது, மேலும் இந்த விரிவாக்கம் எங்கள் புரவலர்களுக்கு அவர்கள் எங்கள் விற்பனையகத்தில் நுழைந்தது முதல் அவர்கள் தங்கள் புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்களில் சவாரி செய்யும் வரை சாத்தியமான சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த வசதியானது, இன்னும் பல ஆர்வலர்களை இந்த பந்தத்தில் சேர்க்க உதவும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.”என்று கூறினார்.

New Yezdi Adventure unveiled in Chennai by Mr. Ashish Singh Joshi, CEO, Jawa Yezdi Motorcycles

“இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட யெஸ்டி அட்வென்ச்சர் மூலம், தோரணையான வடிவமைப்பு, அதிநவீன அம்சங்கள் மற்றும் இணையற்ற செயல்திறன் ஆகியவற்றின் சரியான திரித்துவத்துடன் நாங்கள் இந்த பிரிவில் புரட்சி ஏற்படுத்துகிறோம். ஒவ்வொரு சவாரியும் விதிவிலக்கானதாக இருக்கும் வகையில் உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் நிரம்பியுள்ள இந்த மோட்டார்சைக்கிள், சுற்றுலாவுக்கு உகந்த மற்றும் ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வைக் குறிக்கின்ற வகையில், இந்த நிறுவனம் பரந்து விரிந்த சாலைகள் மற்றும் ஆராயப்படாத பிரதேசங்களை ஆசைப்படுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரமான, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2024 யெஸ்டி அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளையும் காட்சிப்படுத்தியது. இந்த மோட்டார் சைக்கிள், ரூ. 2,09,900 விலையில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் வகையில் புரட்சி ஏற்படுத்தும் வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றின் சரியான ஒருங்கிணைப்பாகும்.

ஒட்டுமொத்த சவாரி அனுபவத்தை மேம்படுத்துகின்ற மென்மையான செயல்திறனை வழங்குவதற்காக புதிய தலைமுறை Alpha2 334cc லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த எஞ்சின், ரைடர்கள் எந்த நிலப்பரப்பையும் நம்பிக்கையுடனும் எளிதாகவும் சமாளிக்க முடியும் என்பதை உறுதி செய்கின்ற ஒரு ஈர்க்கக்கூடிய 29.6PS மற்றும் 29.9Nm ஐ வழங்குகிறது. இது குறிப்பாக சவாலான சாலையற்ற நிலைமைகளில் சிறந்த சமநிலை மற்றும் சூழ்ச்சித்திறனை அனுமதிக்கின்ற புதிய டிகால் பேனல்கள் கொண்ட ஒரு புதிய ஒருங்கிணைந்த பிரதான கூண்டைக் கொண்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள், சிறந்த ஆஃப்-ரோடு திறன் மற்றும் சுற்றுலா செல்வதற்கான சௌகரியத்தையும் வழங்குகின்ற வகுப்பில் முன்னணி 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீண்ட பயணத்திற்கேற்ற சஸ்பென்ஷன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கூடுதலாக, இந்த புதிய யெஸ்டி அட்வென்ச்சர் இப்போது கடினமான சாகசங்களின் போது என்ஜின் மற்றும் பிற முக்கிய கூறுகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகின்ற ஒரு வலுவான புதிய பாதுகாப்பு கவசத்துடன் வருகிறது. மேட் மற்றும் டூயல்-டோன் ஆகிய இரண்டு ஷேடுகளில் கிடைக்கின்ற இந்த புதிய வண்ணக் கலவைகள் டொர்னாடோ பிளாக், மேக்னைட் மெரூன், வுல்ஃப் கிரே மற்றும் க்லேசியர் ஒயிட் ஆகியவை ஆகும், இது சவாரி செய்பவர்கள் அவர்களின் சாகச உணர்வுக்கு மிகவும் பொருத்தமான ஒரு தோற்றத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த புதிய யெஸ்டி அட்வென்ச்சர், பாரம்பரியத்தை புதுமையுடன் இணைத்து, பாரம்பரிய மற்றும் சமகாலத்திய மோட்டார்சைக்கிளை வழங்குகின்ற ஜாவாயெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை தொடர்ந்து உருவகப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு:

ஹீரக் குப்தா
Heerak.gupta@adfactorspr.com
+91 9791488867
ஹிரல் பாஃப்னா
hiral.bafna@adfactorspr.com
+91 9987229613