குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.