November 28, 2024
  • November 28, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

யசோதா திரைப்பட விமர்சனம்

by by Nov 11, 2022 0

புராணம் தெரிந்தவர்கள் யசோதா என்ற பெயரைக் கேட்டால் இன்னொருவர் குழந்தைக்குத் தாயானவள் என்று புரியும். இந்த டைட்டிலை விட வேறு எந்த டைட்டிலும் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை.

சமீப காலத்தில் பெரிதும் செய்திக்கு உள்ளாகும் வாடகைத்தாய் விஷயம்தான் படத்தின் ‘ கரு ‘.

குழந்தை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக வரலட்சுமி சரத்குமார் நடத்தும் ஒரு தனியார் மருத்துவமனை ரகசியமாக இப்படி வாடகைத் தாயாக விரும்பும் பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை தருகிறது….

Read More

பரோல் திரைப்பட விமர்சனம்

by by Nov 10, 2022 0

சினிமாவில் காட்டப்படும் வடசென்னை கதைகளை பார்த்தால் சென்னையில் வாழ்பவர்களுக்கே அடி வயிற்றில் ஒரு பந்து உருளும் என்றால் மற்ற மாவட்டத்துக்காரர்கள் வடசென்னையை எப்படித்தான் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

வெற்றிமாறன் தொடங்கி மற்ற மாறன்கள் வரை வடசென்னையை வகை வகையாகப் பிரித்து தமிழ் சினிமாவில் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எல்லாம் ‘ கான்செப்ட் ‘ அளவில் பாசிட்டிவ் அப்ரோச் படமாக இதைக் கொள்ளலாம்.

வடசென்னை என்றாலே கொள்ளை, கொலை, வஞ்சகம், சூழ்ச்சி என்று காட்டப்படும் நிலையில் இந்தப் பட…

Read More

லவ் டுடே திரைப்பட விமர்சனம்

by by Nov 5, 2022 0

காதலின் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே என்று அழுத்தமாகச் சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குனரும், நாயகனுமான பிரதீப் ரங்கநாதன்.

கதையை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். பிரதீப்பும், நாயகி இவானாவும் காதலிக்கிறார்கள். அதற்கு முன் பின் எதுவும் இல்லாமல் ‘ ஹாப் வே ஓபனிங்’கில் தொடங்கும் படம்.

ஆனால், காதலுக்கு வில்லனாகும் இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரையும் சோதிக்க ஒரு உபாயம் செய்கிறார். இருவரும் அவர்களது கைப்பேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளும் படியும், அதற்குப் பிறகும் அவர்களுக்கு திருமணம்…

Read More

காபி வித் காதல் திரைப்பட விமர்சனம்

by by Nov 5, 2022 0

இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார்.

சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார்.

இவர்களில் ஸ்ரீகாந்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் நவீன சிந்தனை உடையவரான அவருக்கு மனைவி மேல் ஈர்ப்பு இல்லாமல் வெளியே மனம் மேய்ந்தபடி…

Read More

பனாரஸ் திரைப்பட விமர்சனம்

by by Nov 4, 2022 0

காதல் கதைகள் பல வகை. அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.

பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லும் கதை இது உண்மைதானா என்று நினைக்க வைக்கிறது.

அவர்களுக்குள் ஏற்படும் உரசலில் சோனல் , பனாரசுக்கு பறந்து விட, அவளிடம் மன்னிப்புக் கேட்க…

Read More

நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்

by by Nov 3, 2022 0

மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது.

அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக்.

நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர்.

அம்மா அப்பாவுடன் கூட நட்புறவுடன்…

Read More

காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட விமர்சனம்

by by Oct 27, 2022 0

காதலே கதி என்று கிடக்கும் நாயகன் உண்மையான காதல் எது என்பதை தெரிந்து கொள்ளும், ஒரு தீப்பெட்டிக்குள் எழுதி அடக்கி விடக்கூடிய கதை.

ஆனால் அந்த காதல்களின் உள்ளே புகுந்து காரண காரியங்களை பிடித்து அந்த ரசவாதம் எப்படி நடக்கிறது என்பதை நீளமாக சொல்லி முடிக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்.

புதுமுகம் கௌசிக் ராம் நாயகன் வேடமேற்றிருக்கிறார். ஹீரோவுக்கு ஏற்ற உயரம், அதற்கு ஏற்ற உடல்வாகு, இளைஞர்களுக்கு உரிய அழகான ஹேர் ஸ்டைல் என்று முதல் படத்திலேயே ஒரு…

Read More

சர்தார் திரைப்பட விமர்சனம்

by by Oct 22, 2022 0

இந்தப் பூவுலகில் மூன்றாம் உலகப்போர் நேருமானால் அது குடி தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் அறிஞர்கள்.

இயற்கையாக கிடைக்கும் குடிநீரை உலக மக்கள் பயன்படுத்த விடாமல் அந்த பொறுப்பை தனியார் கையில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்ய நேர்ந்தால் அதுவே மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்கின்றன ஆய்வுகள்.

அதற்கு எடுத்துக்காட்டாக உலகின் பல பல பகுதிகளிலும் இப்படி தனியார் நிறுவனம் குடிநீர் விற்பனையை மேற்கொண்டு அதன் விளைவாக கடும் வறட்சியை சந்தித்து வருவது முன் வைக்கப்படுகிறது.

இந்தியாவில்… ஏன் தமிழகத்தில்…

Read More

ஆற்றல் திரைப்பட விமர்சனம்

by by Oct 14, 2022 0

அஜித் படத்துக்கு பிடித்ததைப் போல் அருமையான தலைப்பு பிடித்து விட்ட இயக்குனர் கே.எல்.கண்ணன், அஜித் கிடைக்காத நிலையில் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் விதார்த்தைப் பிடித்து விட்டார்.

ஆனால் விதார்த் ஒன்றும் நடிக்கத் தெரியாத நாயகன் இல்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி நடித்து வரும் அருமையான நடிகர் அவர் என்றிருக்க, இந்த படத்தில் அப்படி என்ன வித்தியாசமான கதை?

அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட விதார்த், கார் மெக்கானிக் சார்லியின்…

Read More

பரத் நடிப்பில் மிரட்ட வரும் மிரள்..!

by by Oct 13, 2022 0

தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் இப்போது வெளிவரவிருக்கும் படம் ‘ மிரள் ‘.

படத்தைப் பார்ப்பவர்கள் மிரண்டு போக வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் எம்.சக்திவேல்.

தயாரிப்பாளரைப் போலவே தரமான படங்களை வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரியின் எஸ்.சக்திவேலன் வெளியிடும் காரணத்தாலும் இந்தப் படம் கவனம் பெறுகிறது.

படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பரத். அவரது ஜோடியாக வாணி போஜன் நடிக்க இவர்களை…

Read More