நடிகர்களிலேயே முதன்மையாக கஜா பாதித்த கிராமத்தை தத்தெடுத்த விஷால்
கஜா நிவாரணமாக பல நடிகர்களும், கலையுலகைச் சேர்ந்தரவர்களும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தொகையில் மாறுபட்டாலும் அவை பெரும்பாலும் பணமாகவோ, பொருள்களாகவோ தற்காலத் தேவைகளுக்காக உதவிக் கொண்டிருக்கின்றன.
அவர்களில் ராகவா லாரன்ஸ் வித்தியாசப்பட்டு புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார். இந்நிலையில் விஷால் ஒரு படி முன்னே போய் கஜாவால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கார்காவயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
நாய் இறைச்சி வந்தது நட்சத்திர ஓட்டல்களுக்கா? பகீர் தகவல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தெரிந்திருக்கலாம். இது பற்றிய பகீர் விவரம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது
அதனையடுத்து இரண்டு தினங்கள் முன்பு காலை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த ஜோத்பூர் விரைவு ரயிலில் உணவுப் பதுகாப்பு அதிகாரிகளும் சென்னை மாநகராட்சி சுகாதாரப்…
Read Moreகஜா கடந்தும் கவலை விடவில்லை – மீண்டும் காற்றழுத்தம்
கஜா புயல் கரை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை (18-11-2018) புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
19, 20-ம் தேதிகளில் தென்மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி…
Read Moreபைரசி தியேட்டர் மீதான தனிநபர் போராட்டம் வெல்லுமா..?
நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்
இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர்.
ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடும் புற்றுநோயுடன் போராடி வருகிறார்….
Read Moreஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படுகிறாரா – கோர்ட்டில் முன் ஜாமீன் மனு
‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிக்ளை நீக்க வேண்டுமென்று ஆளும் கட்சியினர் போராட்டங்களை நடத்துவதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மீடியாக்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்து சர்கார் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்தோ, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்தோ எந்த விளக்கமும் இல்லை.
ஆனால், சர்காருக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கமலும், ரஜினியும் தணிக்கை செய்யப்பட்ட படத்தின் மீதான போராட்டங்கள் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று காலை முதலே…
Read Moreசர்கார் படத்துடன் கூடிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் தீபாவளி வாழ்த்து
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ரசனை பற்றியும் அவரது தமிழ் ட்வீட்டுகளையும் தமிழகம் நன்றாகவே அறியும்.
இந்நிலையில் இன்று இந்தியாவெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினாலும் தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழில் தீபாவளி வாழ்த்துச் சொல்லி ட்வீட் செய்திருக்கிறார் ஹர்பஜன்.
அதில் சர்க்கார் படத்தையும் சேர்த்துக்கொண்டு அதில் வாழ்த்தியிருப்பதுதான் ஹைலைட். அந்த ட்வீட் கீழே…
#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம்…
Read Moreஓவியா திறக்கும் சீரமைக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்..!
அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால்தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும்.
இதை வலியுறுத்தி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார். அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார். பழைய கட்டிடமாக…
Read Moreநெல் ஜெயராமன் குறித்த நடிகர் கார்த்தியின் நெகிழ்ச்சிக் கடிதம் – தவிர்க்காமல் படியுங்கள்
“திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் வழித்தோன்றலாய் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி யானைக்கவுனி, கருங்குருணை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைகால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனைத் தனது பண்ணையில் விளைவித்து வந்தார்.
ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறு ஆய்வாளர்களைப் பங்கேற்க செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி…
Read Moreநான் நல்லவனா கெட்டவனா என்று இப்போது முடிவெடுக்காதீர்கள் – வைரமுத்து
நாடெங்கும் புயல் வீசிக்கொண்டிருக்கும் ‘மி டூ’ விவகாரத்தில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி தொடுத்திருந்த பாலியல் குற்ற ச்சாட்டுகள் கவிஞரைப் பார்த்து ‘யூ டூ..?’ என்ற கேள்வியை முன்வைத்தது.