விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் அதை சொல்லும் விஷயத்தில் சுவாரசியத்தை சேர்க்காமல் விட்ட காரணத்தால் பல படங்கள் வலுவிழந்து தோல்வியை சந்தித்து இருக்கின்றன.
ஆனால் இந்தப் படம் விவசாயத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து நம்மை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும், நடிகர் கார்த்தியும்.
நியாயமான காரணங்களுக்காக ரவுடியிசத்தை பயன்படுத்தி நல்ல தாதாவாக இருக்கிறார் நெப்போலியன். மனைவியை இழந்த அவரது மகனான கார்த்தி நெப்போலியனிடம்…
Read More
சூர்யா நடித்து OTT தளத்தில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற படம், 2D entrainment “சூரரை போற்று”. இத்திரைப்படம் முதல் முறையாக Amazon Prime நிறுவனம் மூலம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
சூர்யா நடிப்பில், மிக பிரமாண்ட தயாரிப்பாக கடந்தாண்டு Amazon Prime ல் வெளியான திரைப்படம் “சூரரை போற்று”. நட்சத்திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் டிஜிட்டலில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் சாதனை படைத்தது.
இயக்குநர் சுதா கொங்குரா…
Read More
நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவிப்பு
நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இதனை வாழ்த்தி கமல் இட்டுள்ள டிவிட்…

Read More
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..
“கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டார். “மீன் வாங்கி கொடுப்பதை…
Read More
தன் ‘மைனா’ படம் முதலே காடுகளின் காதலனாகிப் போன இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் தன் குழுவினருடன் காட்டுக்குள்ளேயே சென்று படம் பிடித்து வந்திருக்கிறார். காட்டுக்குள் அவர் பெற்ற அனுபவங்களின் வாயிலாக இந்த முறை காட்டின் அகலமும், நீளமும் அவருக்கு நன்றாகவே கை வந்திருப்பதாகக் கொள்ள முடிகிறது.
காடுகளின் அவசியத்தையும், காடுகளில் மனிதர்களின் பிரவேசத்தால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், வனமும், வன விலங்குகளும் அழிவதால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தையும் இந்தப்படம் மூலம் அபாய அறிவிப்பாக…
Read More