மக்கள் இயக்குனராக இருந்து மறக்க இயலாத மாபெரும் படங்களைத் தந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் பள்ளியிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் ஒன்றே போதும் இந்தப் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் திறமையைப் புரிந்து கொள்வதற்கு.
ஏற்கனவே பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க ஆக்சன் பாதையில் பயணிக்க வைத்திருந்த கல்யாண், இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு முரட்டு முகத்தைக் காட்ட வைத்திருக்கிறார்.
இத்தனை முரட்டுத்தனமான ஜெயம்…
Read More
விலங்குகளையோ பறவைகளையோ கொன்றால் அந்தப் பாவம் அவற்றை சமைத்துத் தின்றதுடன் முடிந்து போய்விடும் என்ற பொருளில் ஒரு சொல்லாடல் உண்டு. ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற பாவம்..?
… என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தில் இயக்குனர் தயாள் பத்மநாபன் சொல்ல வந்திருக்கும் செய்தி.
ஆங்கிலத்தில் மூலக்கதை பெறப்பட்டு கர்நாடகத்தில் மேடை நாடகமாக நூறு ஆண்டுகளாக வெற்றி பெற்ற இந்தக் கதையை முதலில் கன்னடத்துக்கும் பின்னர் தெலுங்குக்கும் இப்போது தமிழுக்குமாக தயாள் பத்மநாபனே இயக்கி அளித்திருக்கிறார்.
சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில்…
Read More
அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த ‘அயலி’ என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு…
Read More
பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்விடை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படகுழுவினர் பேசியதாவது …

*இயக்குநர் பிராஷ் பேசும்போது*
நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத்…
Read More
கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜேஷ், வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா,…
Read More
பிரபல விநியோகஸ்திரம் தயாரிப்பாளருமான வி. ஏ. துரை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர்.
பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்.
இவர் தயாரிப்பில் விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இடையில் பட தயாரிப்பை நிறுத்தியவர் அதற்குப்பின் வெளியுலகத்துக்கு அதிகமாக தெரியாமல் இருந்தார்.
இந்நிலையில் அவர் இப்போது…
Read More
கன்னட சினிமாவில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கும் கொன்றால் பாவம் படம் ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில், தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னடம் மற்றும் தெலுங்கு பதிப்புகளை காட்டிலும் தமிழ் பதிப்பை மிக பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ள தயாள் பத்மநாபன், தமிழை தாய்…
Read More
Shiju Thameen’s Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தில் வெற்றி, நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ்…
Read More
அன்றாடம் செய்தித்தாள்களில் யாரோ ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் செய்தி வந்து கொண்டிருக்கிறது.
ஒன்றல்ல… ஜென்டில்மேன்..! இந்தியாவெங்கும் ஒரு நாளில் இப்படி பாலியல் பலாத்காரத்துக்காக 100 பெண்கள் கடத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு வருடமும் 36 ஆயிரம் பேர்.
நெஞ்சு அடைகிறதா..? இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் கடத்தினார்கள் கற்பழித்தார்கள் என்பதுடன் அந்த செய்தியை நாம் கடந்து விடுகிறோம். ஆனால் பாலியல் பலாத்காரம் நடைபெறுவதற்கு முன் எத்தனை மணி நேரம் எத்தனை…
Read More