October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஜெ பேபி திரைப்பட விமர்சனம்

by by Mar 7, 2024 0

அனைத்து உயிர்களும் போற்றி வணங்கத்தக்க ஒரு ஜீவன் ‘ அம்மா’. அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்து கணவனையும் இழந்த கைம்பெண்கள் அந்தக் குழந்தைகளை வளர்க்கப்படும் பாடு கண்ணால் காணாத தெய்வத்திற்கு ஒப்பானது.

கண்ணில் கண்ட தெய்வமான அந்தத் தாயின் நிலை கடைசியில் எப்படி ஆகிறது என்பதை உணர்வுகள் கொப்பளிக்கப் படமாக வடித்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி.

அந்த தாயின் பாத்திரத்தில் வாழ்ந்தே முடித்திருக்கிறார் ஊர்வசி. கமல், ஊர்வசி போன்றவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால்தான்…

Read More

அரிமாபட்டி சக்திவேல் திரைப்பட விமர்சனம்

by by Mar 6, 2024 0

திருச்சிக்கு அருகில் இருக்கும் அரிமா பட்டி என்கிற ஊரில் ஒரு பிளாஷ் பேக்குடன் தொடங்குகிறது படம்.

சாதி விட்டு சாதி திருமணம் செய்த குற்றத்திற்காக ஒரு காதல் ஜோடியை பஞ்சாயத்தில் வைத்து ஊரை விட்டு ஒதுக்கி வைக்க, அதை எதிர்த்து அதே ஊரில் வாழ முற்படுகிறது ஜோடி.

ஊர்ப்பொதுவில் வைத்து அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு அன்று இரவு அவர்கள் வீட்டுக்குள் போகும் ஒரு கும்பல் அவர்களைக் கொன்று தீர்க்கிறது. அந்த அளவுக்கு சாதி வெறி தலைக்கு ஏறிய கிராமம்.

மேற்படி…

Read More

ஹன்சிகா’ நடிப்பில் மார்ச்-8-ஆம் தேதி மிரட்டலாக வெளியாகும் ‘கார்டியன்’

by by Mar 5, 2024 0

*’கார்டியன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!*

தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் நடித்துள்ள ‘கார்டியன்’ திரைப்படத்தின் மிரட்டலான டீஸர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீஸரில் ஹன்சிகா இரட்டை வேடத்தில் வருவது மாதிரியான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்யும் பயமுறுத்தக்கூடிய காட்சிகளுடன் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்புடன் கூடிய காட்சிகளும் அமைந்துள்ளன.
இத்திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானியுடன் சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,…

Read More

ஜெ பேபி எனக்குத் தந்த உணர்வுகளை மக்களுக்கும் தரும்..! – பா.ரஞ்சித்

by by Mar 5, 2024 0

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் ‘J.பேபி.’

ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

 

சிறப்பு…

Read More

சினிமா அரசியலை விட்டு போகமாட்டேன் – ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ்

by by Mar 4, 2024 0

.காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி…

Read More

எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பாள் – ஷில்பா மஞ்சுநாத்

by by Mar 3, 2024 0

“சிங்கப் பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “சிங்கப் பெண்ணே”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ்…

Read More

போர் திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2024 0

இரண்டு கல்லூரிப் பருவ மாணவர்களின் சிறு வயது அக்கப்போர், ஒரு பல்கலைக்கழகத்தையே வைக்கோல் போராகப் பற்றி எரிய வைப்பதுதான் கதை.
 
அந்த இரண்டு மாணவர்களாக அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம். அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் இருப்பதாகக் கதை விட்டிருக்கிறார்… அல்ல… அல்ல… கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்.
 
நமக்கென்னவோ கேட்பார், மேய்ப்பார் இல்லாமல் போதை வஸ்துகள், அடிதடி, அராத்து மாணவர்கள், அவர்களின் ‘பலான’ பழக்க வழக்கம் என்று புழங்கும் அந்தப் பல்கலைக்கழகம், கலாப தேசமான …

Read More

துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

by by Mar 2, 2024 0

*‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி*

*இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்*

நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில்…

Read More

சீயான் 62′ மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

by by Mar 2, 2024 0

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக…

Read More

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம்

by by Mar 2, 2024 0

ஒரு வீட்டுக்குள் இருந்து மர்ம உருவம் துரத்த, பயந்து போய் வெளியில் ஓடிவரும் நாயகி பிரியங்கா திம்மேஷை வெளியே தயாராக நிற்கும் ஒரு கார் அடித்துத் தூக்குகிறது.

பேச்சு மூச்சின்றி மழையில் கிடக்கும் அவரை பின்னால் வருகிற ஒரு காரிலிருந்து இறங்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறார். அடிபட்டிருப்பது தன் மனைவி என்றும் தன்னுடைய பெயர் ரகு என்றும் மருத்துவமனையில் பதிவு செய்கிறார்.

பத்து நாட்கள் அந்த மருத்துவமனையில் உணவருந்தாமல் (!) தூங்காமல் (!!) மனைவி…

Read More