November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ஐங்கரன் திரைப்பட விமர்சனம்

by by May 4, 2022 0

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ?” என்பது போலவே “என்ன திறமை இல்லை இந்த திருநாட்டில் ?” என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு.

பல இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் இந்த சமூகத்துக்கு தேவைப்படும் விதத்தில் இருந்தாலும் அவற்றுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில் அரசு சுணக்கம் காட்டி வருவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அதை முன்னிலைப்படுத்தி ஒரு கதையைப் படமாக எடுத்திருக்கிறார் அவர்.

நாமக்கல்லில் நடுத்தர குடும்பத்தில் ஒரு காவலரின்…

Read More

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விமர்சனம்

by by Apr 29, 2022 0

டைட்டிலில் கதை சொல்லியாச்சு, விஜய் சேதுபதியை நயன்ஸும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்று. இவர்களில் யார் ஒருவரின் காதலுக்கு ஆளானாலே மச்சக்காரன் என்று அர்த்தம். ரெண்டு பேரும் காதலித்தால்..? இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டிருக்க, படம் வந்தே விட… தியேட்டர்களில் இளமைக் கொண்டாட்டம்தான். 

வழக்கமான விக்னேஷ் சிவனின் பாணியிலேயே நகைச்சுவையாக தொடங்குகிறது படம். விஜய் சேதுபதியின் பெற்றோர் குடும்பத்தில் சகோதர சகோதரிக்குக் கல்யாணமே நடக்காமல் இருக்க, அது ஏன் என்பது ஒரு குட்டிக்கதை. இந்த…

Read More

ஹாஸ்டல் திரைப்பட விமர்சனம்

by by Apr 28, 2022 0

ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு பெண் தங்க நேர்ந்தால் என்ன ஆகும் – இந்த அந்தக சூழலில் கந்தகம் சேர்த்தது போல அந்த ஹாஸ்டலுக்குள் தன் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் சேர்ந்து கொண்டால் அந்த அதகளம் எப்படி இருக்கும், அதை எப்படியெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்று காமெடியாக சொல்லியிருக்கும் முயற்சிதான் இது.

இதில் இன்றைய தலைமுறை ஹீரோ அசோக்செல்வனும், பிரியா பவானி சங்கரும் சேர்ந்துகொள்ள ஒரு இளமை பேக்கேஜுடன், நகைச்சுவையின்…

Read More

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட விமர்சனம்

by by Apr 27, 2022 0

செல்போன் கண்டுபிடிக்கப்படும் வரை ஆஃப்லைனில் அடுத்தவர் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருந்த நாம், செல்போன் வந்த பிறகு ஆன்லைனிலும் அடுத்தவர் வாழ்க்கைக்குள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் கமெண்டுகளும் மீம்ஸ்களும் போட்டு அதை அடுத்தவருக்கு அனுப்பிக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் எத்தகைய விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது என்று உரத்துச் சொல்லும் படம்.

சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார் நடிகர் விதார்த்….

Read More

இடியட் திரைப்பட விமர்சனம்

by by Apr 5, 2022 0

எதை நினைத்து இந்தப்படத்துக்கு இப்படி ஒரு டைட்டில் வைத்தாரோ இயக்குனர் ராம் பாலா என்று தெரியவில்லை. ஆனால், படமும் திரில்லராகவோ, ஹாரராகவோ, காமெடியாகவோ இல்லமல் குழப்பமாகத்தான் இருக்கிறது. 
 
ஒரு மாதிரியாக நாம் புரிந்து கொள்ளும் கதை என்பது இதுதான்.
 
இடியட்டுகள் வசிக்கும் ஒரு கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கிறார் மகா இடியட்டான ஆனந்தராஜ். ஒலிம்பிக் ஜோதி ஏந்தி வந்த தடகள வீரரை ஊரைக் கொளுத்த வந்தான் என்று பிடித்து வைத்து அவரை எரிக்க தீர்ப்பு சொல்ல, நல்லவேளையாக போலீஸ்…

Read More

செல்ஃபி திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2022 0

தன்பிள்ளை ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ ஆக வேண்டும்  என்பது இன்றைய பெற்றோர்களின் கண்மூடித்தனமான கனவு. அதற்காக எப்பாடுபட்டாவது சேர்த்த பணத்தை நம்பிக் கொடுத்து ஏமாறுவது ஒரு பக்கம்.

அந்த பலவீனத்தையே பயன்படுத்திக்கொண்டு தனியார் கல்லூரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மேனேஜ்மென்ட் சீட்’டுக்கு கணக்கில்லாத ரேட் வசூலித்துக் கொள்ளையடிப்பது இன்னொரு பக்கம்.
 
இதில் மூன்றாவது பக்கம் ஒன்றும் இருக்கிறது. மேற்படி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராகவோ பொறியாளராக வரவேண்டும் என்று தாங்களாகவே கனவுகண்டு அதைப் பிள்ளைகள் மேல்…

Read More

குதிரைவால் திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2022 0

கிடைத்தற்கரிய ஒரு பொருளை குதிரைக் கொம்பு என்பார்கள். இந்தப் பட இயக்குனர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் அப்படி ஒரு அரிய விஷயத்தை குதிரைவாலாக மாற்றியிருக்கிறார்கள்.

சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் கனவுகளுக்கும் நாம் நிஜத்தில் காணும் கனவுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சினிமாவில் வரும் கனவுகள் மிகுந்த லாஜிக்கோடு நிஜத்தின் நகல் போலவே காட்டி பின்னால் அதைக் கனவு என்று சொல்லி முடிப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் நாம் காணும் கனவுகளில் எந்த லாஜிக்கும் இருக்காது. நம் நினைவுப் படிமங்களில் தங்கிவிட்ட…

Read More

கிளாப் திரைப்பட விமர்சனம்

by by Mar 12, 2022 0

விளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது.

அந்த லைனை இந்தப்படத்திலும் பயன்படுத்தி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா. அதற்கு அவர் இந்தப் படத்தில் தேர்ந்தெடுத்திருப்பது ‘தட களம்’.
 
தடகளத்தில் ஓட்டப்பந்தய வீரராக…

Read More

எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம்

by by Mar 10, 2022 0

சூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா ஒருவரை கொலை செய்து விட்டார் என்று அவரது அம்மா சரண்யாவுக்கு தகவல் வர, தன் கணவர் சத்யராஜிடம் அவர், “நம்ம புள்ள ஒரு கொலை பண்ணிட்டானாம்…” என்று சொல்ல…

Read More

வலிமை திரைப்பட விமர்சனம்

by by Feb 24, 2022 0

உலகமெல்லாம் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆக்‌ஷன் ட்ரீட்டாக வந்திருக்கும் படம். ஆனால் அஜீத்துக்கு ஆக்‌ஷனைக் காட்டிலும் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதால் அதையும் கலந்து ஒரு கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படம் அந்த அளவுக்குப் பின்னியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
 

வலிமையாக வாழ்ந்தால் நாம் குற்றமே செய்தாலும் தவறாகாது என்று நினைக்கும் வில்லன், அவனைக் குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டுமானால் அவனை விட வலிமை…

Read More