April 4, 2025
  • April 4, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

டெஸ்ட் (TEST) OTT திரைப்பட விமர்சனம்

by by Apr 4, 2025 0

இதுவரை நாம் தயாரிப்பாளராக மட்டுமே அறிந்து வைத்திருக்கும் ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ எஸ். சஷிகாந்த் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராகி இருக்கும் படம்.

மாதவன், சித்தார்த், நயன்தாரா – இந்த மூன்று பேரைச் சுற்றி நடக்கும் உணர்ச்சி மயமான திரில்லர் படம் இது. 

தண்ணீரில் இருந்து பெறப்படும் சக்தியில் இயங்கும் என்ஜின் மூலம் வாகனத்துக்கு ஆகும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என்ற ப்ராஜெக்ட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதற்கான அனுமதியைப் பெற…

Read More

இஎம்ஐ (EMI) திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2025 0

இஎம்ஐ என்கிற மாதத் தவணைத் திட்டங்கள்தான் அனேகமாக எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பங்களிலும் பொருள்களைச் சேர்க்க உதவும் ஒரே வழியாக இருந்து வருகிறது.

‘ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்கிற அளவில் வருமானத்துக்கு அதிகமான அளவில் மாதத் தவணைத் திட்டங்களில் சிக்கிக்கொண்டால் இன்றைய நிலவரப்படி அதை வசூலிக்க வங்கிகள் எப்படி எல்லாம் மக்களைத் துன்புறுத்துகிறார்கள் என்பதைச் சொல்லும் படம் இது. 

படத்தை இயக்கியிருக்கும் சதாசிவம் சின்னராஜே கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார். 

அம்மா செந்திகுமாரியுடன் வாழ்ந்து வரும் பட்டதாரியான அவர்…

Read More

தரைப்படை திரைப்பட விமர்சனம்

by by Apr 3, 2025 0

இந்தப் பட இயக்குனர் ராம் பிரபா ஒரு ஹாலிவுட் இயக்குனராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார் போலிருக்கிறது. ஆனால் தமிழ்ப் படம் மட்டுமே இயக்க வாய்ப்புக் கிடைத்திருக்க… மூன்று ஹீரோக்களை வைத்து ஆளுக்கு ஒரு துப்பாக்கியையும் கையில் கொடுத்து எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுங்கள் என்று கட்டளை பிறப்பித்திருக்கிறார் போலிருக்கிறது.

ஒரு ஆங்கிலப் படத்தில் கூட இவ்வளவு துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது.

நாயகர்களாக வரும் ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா மூவருமே ஆளுக்கு ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்ப்பவர்களை எல்லாம்…

Read More

S/o காலிங்கராயன் திரைப்பட விமர்சனம்

by by Apr 2, 2025 0

நியாயப்படி இந்தப் படத்தின் தலைப்பு ‘சேது s/o காலிங்கராயன்’ என்று இருந்திருக்க வேண்டும். ஆனால் சேது என்கிற கேரக்டரையே இடைவேளை வரை சஸ்பென்சாக வைத்திருக்கும் இயக்குனர் பாரதி மோகன் அதைத் தலைப்பில் கொடுத்து சஸ்பென்சைக் கெடுத்து விட வேண்டாம் என்று நினைத்திருக்கிறார் போலும். 

உதய கிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார் ஆனால் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பதோ, அவர் பெயர் என்ன என்பதோ யாருக்கும் தெரியாது. காரணம், இரண்டாவது காட்சியிலேயே அவர் சுடப்பட்டு மலைக்காட்டில் விழுகிறார். அவரை…

Read More

எம்புரான் திரைப்பட விமர்சனம்

by by Mar 29, 2025 0

கேரளத்தை இரட்சிக்க வந்த எம்பிரானாக மோகன்லாலை பாவித்து இந்த படத்தின் முதல் பாகமான லூசிபரை இயக்கிய பிருத்திவிராஜ் சுகுமாரனே இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.

மதக் கலவரத்துடன் வட மாநிலத்தில் தொடங்குகிறது படம். ஒரு இஸ்லாமியரையும் தப்ப விடாமல் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கிறது மத வெறியாளர் கூட்டம். அதனை தலைமை தாங்கி நடத்துகிறார் அபிமன்யு சிங்.

அப்படி கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு குடும்பத்தின் ஒரே வாரிசாக நிற்கும் சிறுவனின் அவலக் குரலுடன் முடிகிறது அந்தப் பகுதி. அதற்குப்…

Read More

வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்பட விமர்சனம்

by by Mar 28, 2025 0

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை.

ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச நேரத்தில் சீயான் திரையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்கிற ‘கெத்து’தான்.

பெரியவர் ரவி அவர் மகன் கண்ணன் என்று மிரட்டிக்…

Read More

அறம் செய் திரைப்பட விமர்சனம்

by by Mar 27, 2025 0

‘மக்களுக்குத் தேவை ஆட்சி மாற்றம் அல்ல… அரசியல் மாற்றம்..!’ என்கிற வலுவான விஷயத்தை நீட்டி முழக்கி நிமிர்ந்து குனிந்து வளைந்து படுத்தெல்லாம் சொல்லி இருக்கும் படம்.

பெண்ணியவாதியான அஞ்சனா கீர்த்தி, தன்னுடன் ஒரு செம்படையைத் தயார் செய்து கொண்டு அரசியலில் மாற்றம் நிகழ்த்தப் போகிறேன் என்று கிளம்புகிறார். அவரது குடும்பம் சட்ட வல்லுநர்களைக் கொண்டிருக்க அப்பாவே நீதிபதியாக இருந்தும், அத்தனை பேரின் அறிவுரையையும் மீறி தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார் அஞ்சனா. சட்டமன்றத்தை முற்றுகையிடப் போகிறோம் என்று…

Read More

தி டோர் திரைப்பட விமர்சனம்

by by Mar 27, 2025 0

ஒரு கதவு – அந்தக் கதவுக்குப் பின்னால் என்ன நடக்கிறது… அல்லது அதைத் திறந்தால் என்ன நடக்கும் என்பது மாதிரியான எதிர்பார்ப்பில் போனீர்களானால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

இன்னும் சொல்லப் போனால் படத்தில் எந்த டோருக்கும்… அதாவது கதவுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. பிறகு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்றால் நாம் வாழும் உலகத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நாம் பார்க்க முடியாத அளவில் ஒரு கதவு இருக்கிறது அந்தக் கதவைத்…

Read More

ட்ராமா திரைப்பட விமர்சனம்

by by Mar 22, 2025 0

நீரிழிவு நோய் மையங்களுக்குப் போட்டியாக அங்கங்கே முளைத்து வருகின்றன செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள். அவற்றில் என்ன விதமான மோசடிகள் நடக்கின்றன – அல்லது நடக்கலாம் என்பதை முன்வைத்து சொல்லப்பட்ட கதை இது.

இதை ஹைப்பர் லிங்க் முறையில் நான்கு தனித்தனி கதைகளாகச் சொல்லி ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக ஒன்று சேர்க்கும் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன், அதில் சமுதாயத்துக்கான ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். 

ஒரு பக்கம் குழந்தை பிறக்க வழி இல்லாத நிலையில் விவேக் பிரசன்னாவும் சாந்தினி தமிழரசனும் மன…

Read More

அஸ்திரம் திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2025 0

தோல்வி ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று சொல்கிற கதை. அதை ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்.

குளுகுளுவென்று கொடைக்கானலில் தொடங்கும் கதை ஒரு தற்கொலையின் காரணத்தால் சூடாகிறது. அடிவயிற்றில் கத்தியை இறக்கித் தற்கொலை செய்து கொள்கிறான் ஒரு இளைஞன். 

அதைப் பற்றிய புலன் விசாரணை செய்கிற வேலை, விடுப்பில் இருக்கும் காவல் அதிகாரியான நாயகன் ஷாமிடம் வந்து சேர்கிறது.

அதைப் பற்றிய விசாரணையில் இறங்கும்போது இதே போன்று வேறு சில தற்கொலைகளும் மற்ற…

Read More