August 26, 2026
  • August 26, 2026
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

பா இரஞ்சித் முன்னெடுக்கும் பண்பாட்டு முயற்சிகளுக்கு விசிக துணை நிற்கும் – தொல் திருமாவளவன் 

by by Jan 2, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும்.

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக…

Read More

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடம்

by by Dec 28, 2021 0

நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
 
இதுவரை 3 கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 4-ம் கட்ட தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
 

இதில் பெரிய மாநிலங்களுக்கான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறைக்கு 72.42 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான…

Read More

வடிவேலுவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு..? மருத்துவ மனையில் அனுமதி

by by Dec 24, 2021 0

லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிக்க சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் நாயகனாக நடிப்பதன் மூலம் மீண்டும் பரபரப்பான செய்திகளில் வந்தார் வைகைப்புயல் வடிவேலு.

படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்புக்குள்ளான படத்தின் பாடல் கம்போஸிங் வேலைகளுக்காக லண்டன் சென்ற டீமில் வடிவேலுவும் இடம் பெற்றார். தன் படத்தின் பாடல் உருவாக்கத்தில் எப்போதுமே ஆர்வம் காட்டுவார் வடிவேலு. எனவே அவரும் இயக்குநர் சுராஜுடன் லண்டன் சென்றிருந்தார்.

இந்நிலையில் லண்டன்…

Read More

கலைஞர் கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார் 

by by Dec 21, 2021 0

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்..சுமார் 48 ஆண்டுகள் கலைஞரின் பி.ஏ-வாக இருந்த சண்முகநாதன் கலைஞர் முதல்வராக இல்லாத போது அவரது உதவியாளராக பணியை தொடர தனது அரசு பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞரின் வாழ்க்கையில் நிழலாக இருந்தவர் விண்ணுலகிலும் அவ்ருக்கு உதவ சண்முகநாதன் காலமாகி விட்டார் என்றுதான் தோன்றுகிறது

 

Read More

லெஸ்பியன் ஆன 96 புகழ் கௌரி கிஷன் டிக்கிலோனா அனகா

by by Nov 21, 2021 0

கௌரி கிஷன் என்று பிரபலமாக அறியப்படும் 96 திரைப்பட புகழ் கௌரி ஜி கே மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர்.

வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள மகிழினி நவம்பர் 22 அன்று சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்படும்.

மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை…

Read More

கோவையில் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்த மாணவியின் உடலை வாங்க மறுப்பு

by by Nov 13, 2021 0

கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போராடியவர்கள், ”மாணவி…

Read More

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதத்துக்கு நடிகர் சூர்யா பதில்

by by Nov 11, 2021 0

ஜெய் பீம் படம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பிய கடிதத்துக்கு இன்று பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார் நடிகர் சூர்யா. அது வருமாறு…

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.  

நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், ‘அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு…

Read More

கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் திடீர் மரணம் – சோகத்தில் கர்நாடகா

by by Oct 29, 2021 0

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் வருகிறார்.

இன்னும் மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலை பற்றிய தெளிவான விளக்கம் வராத நிலையில் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

இன்று காலை 11.30க்கு உடற்பயிற்சியின் போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரில் உள்ள…

Read More

கமல் பாரதிராஜா இளையராஜாவுக்கும் பால்கே விருது வழங்க வைரமுத்து கோரிக்கை

by by Oct 27, 2021 0

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. 

இதுகுறித்து அவர் டுவிட்டரில், “பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம்.
 
கமல்ஹாசன்…

Read More

ஆந்தையின் ஆசியுடன் சவுந்தர்யா ரஜினி தொடங்கிய ஹூட் சமூக வலைதளம்

by by Oct 25, 2021 0

இன்று முற்பகலில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது குடியரசு துணைத் தலைவரால் வழங்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இன்று பிற்பகலில் கூடியது.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினி, ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் தொடங்கியுள்ளார்.

பேஸ்புக்,…

Read More