காளிதாஸ் ஜெயராமுக்காக என் அசிஸ்டெண்ட்கள் கதை எழுதி வருகிறார்கள் – லோகேஷ் கனகராஜ்
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
தயாரிப்பாளர் ஸ்ரீஜித் K.S பேசியதாவது…
எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள்….
ரிச்சர்டுடன் நடித்ததில் ‘தல’க்கு நெருக்கமானது போல் உணர்ந்தேன் – யாஷிகா ஆனந்த்
’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா, மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த், மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பாடகியும் இந்தப்…
Read More
பிரைம் வீடியோ வழங்கும் ‘தி வில்லேஜ்’ சீரிஸின் டிரெய்லர் வெளியீடு
பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது…
தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்…

பிரைம்…
Read More
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாகும் ‘வா வரலாம் வா’ டிசம்பர் 1- ல் வெளியாகிறது
எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா”
மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது
ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்.
சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள்.
சைத்ரா திரைப்பட விமர்சனம்
எல்லா பேய் படங்களிலும் ஒரே மாதிரியான கான்செப்டையே சொல்கிறார்களே என்று இந்தப் பட இயக்குனர் எம்.ஜெனித்குமார் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் வித்தியாசமான ஒரு லைனைப் பிடிக்கிறேன் என்று ஒரு ஆவி விஷயத்தைப் பிடித்திருக்கிறார்.
அது என்னவென்றால் ஒருவர் இறக்கும்போது அதை இன்னொருவர் பார்த்துவிட்டால் இறந்து போனவர் ஆவியாக வந்து தன் மரணத்தை பார்த்தவர்களைக் கொன்று ஆவியாக்கிவிடுவார் என்ற கான்செப்ட்தான் அது.
அந்த கான்செப்டின்படியே படத்தின் நாயகியான யாஷிகா, தன் தோழி பூஜாவும் அவரது கணவரும் இறப்பதை நேரில் பார்த்துவிட…
Read More
பார்க்கிங் பிரச்சினைக்காக கொலையே நடந்திருக்கிறது – இயக்குனர் சொன்ன அதிர்ச்சித் தகவல்
“இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வண்டிகளை பார்க்கிங் செய்வதுதான்…” என்று ஆரம்பித்தார் ‘ பார்க்கிங் ‘ என்ற தலைப்பிட்ட படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
“கொல்கத்தாவில் நடந்ததாக நான் ஒரு செய்தி படித்தேன். அதில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்று விட்டார்கள். அதை விசாரணை செய்த போதுதான் அதன் பின்னணி வண்டி பார்க்கிங் செய்வதால் எழுந்த பிரச்சினை என்று தெரிய வந்தது…” என்ற ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் பார்க்கிங் படத்தில்…
Read More
ரெய்டு திரைப்பட விமர்சனம்
நிஜ வாழ்க்கையில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியுமோ என்னவோ, ஆனால் சினிமாவில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வாழவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.
அப்படி நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் பிரபு வாழ்ந்து தாதாக்களை சுளுக்கு எடுக்க… பதிலுக்கு அவர்கள் அவரது மனைவி ஸ்ரீ திவ்யாவைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.
வில்லன்களைப் பழிதீர்க்க விக்ரம் பிரபு ரெய்டு எடுப்பதுதான் இந்தப் படத்தின் கதை.
ஒரு ஆக்சன் ஹீரோவாக பரிமளிப்பது என்பது சாதாரண வேலை இல்லை. அப்படி இந்தப்…
Read More
தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டீசர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது..!
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக…
Read More
நம் கருத்துக்கு வராத போதை உலகில் இளைஞர்கள் சீரழிகிறார்கள் – QG இயக்குனர்
தமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம்.
அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்கள் குழுதான்.
வெளியான இந்த படத்தின் டிரைலரில் “இவர்களா இப்படி..?” என்கிற அளவில் பிரியாமணியும், சாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர படத்தில்…
Read More
தி மார்வெல்ஸ் திரைப்பட விமர்சனம்
இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளியாகியிருக்கும் 33 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘தி மார்வெல்ஸ் (2023)’.
இந்தப்படம், 2019 இல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அந்தப் படத்தின் மூலம், MCU இன் முதல் பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெலை உளகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.

கேப்டன் மார்வெலின்…
Read More