இப்போது திரைக்கு வரும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி… பல துறைகளில் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். இவர்களில் வடக்கே இருந்து வரும் ‘அடா ஷர்மா’ அடடே போட வைக்கும் அளவுக்கு திறமைசாலி.
இவர் கயிறை வைத்து விளையாடும் ‘மல்லகம்ப்’ விளையாட்டில் சூரி (‘சூரர்’க்கு பெண்பால் ‘சூரி’தானே..?) என்பதை கடந்த முறை அவரே ட்வீட் செய்த வீடியோவில் போட்டிருந்தோம். இந்த முறையும் ஒரு வீடியோ போஸ்ட் செய்திருக்கிறார் அவர்.
தமிழ் இயக்குநர்களில் தனக்கென ஒரு அடையாளத்துடன் குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தும் விதமாகக் கதைகளை அமைத்து முன்னணி பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.
தன் படங்களில் முக்கியமான அல்லது கதை நாயகனாகவும் நடித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட பொது வாழ்வில் அதிகம் அக்கறை கொண்டிருந்ததால் சினிமாவுக்கு இடைவேளை விட்டிருந்தார்.
நீண்ட காலமாக வெளிவராமலிருந்த அவரது களவாடிய பொழுதுகள் படம் கடந்த வருடம் வெளியாகி அந்த இடைவெளியை கொஞ்சம் குறைத்தது.
இப்போது பிரபுதேவா நடிக்க வாசன் விஷுவல்…
Read More
விஜய்யை வைத்து ‘தலைவா’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய். அதனாலேயே அந்தப்பட வெளியீட்டில் நிறைய சிக்கல் எழுந்தது. அப்போதைய முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா.
நிற்க… இப்போது அதே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற தலைப்பில் இயக்கவிருக்கிறார் அதே விஜய். காலம் எப்படி சுழன்றடிக்கிறது என்ற கருத்துடன் இயக்குநர் விஜய் சொல்வதைக் கேளுங்கள்.
“தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக…
Read More
ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான்.
அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக,…
Read More
கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது.’கே19′ (K19) என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும்…
Read More
‘தம்பி திரைக்களம்’ மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின்…
Read More
லால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம்.
அரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான்…
Read More