நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் இப்போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தையும் ஃபேஸ்புக் காதல் பற்றியும் முன்வைத்து ஒரு படம் உருவாகிறது.
அந்தப்படத்துக்கு ‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ‘ராகுல் பரமகம்சா’ இயக்கியிருக்கிறார்.
ஆர்பிஎச் சினிமாஸ் சார்பாக மும்தாஜ் தயாரிக்கும் இந்தப்படத்தில் எஸ்எஸ்எஸ் ஆர்யன் நாயகனாகிறார். உபாசனா ஆர்.சி நாயகியாகிறார். கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, ஒளிப்பதிவை மனோகர் ஏற்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ராகுல் பரமகம்சா கூறும்போது, “பேஸ்புக்கில் உள்ள அனைத்து…
Read More
‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து….
“நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது. எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும்…
Read More
‘ஸ்டூடியோ கிரீன்’ தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மகாமுனி’.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் பேசியதிலிருந்து…
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா –
“2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி…
Read More
போதை சாம்ராஜ்யம் எப்படி மாணவர்கள் சமூகத்திலும் புகுந்து அவர்கள் வாழ்வை அழிக்கிறது என்ற கருத்தை வைத்து பாலாவின் உதவி இயக்குநராக இருந்த நந்தன் சுப்பராயன் சொல்ல வந்திருக்கிறார்.
கதை சிதம்பரத்தில் நடக்கிறது. நாயகன் அஞ்சனும், அமுதவாணனும் தங்கள் நண்பர் பாலாஜி ராதகிருஷ்ணனைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருகிறார்கள். அவர் என்ன ஆனார் என்பதுடன் அதில் நாயகன் எடுக்கும் முடிவு என்ன என்பதும்தான் கதை.
அஞ்சனுக்கு ‘சே குவாரா’ என்று பாத்திரப்பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்தும் பாத்திரப்படைப்பு அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது….
Read More
என்ன செய்தால் சிம்புவை வழிக்குக் கொண்டுவர முடியுமென்று தயாரிப்பாளர்கள் வேதனை கொள்ளாத நாளில்லை. முக்கியமாக அவரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பெருத்த தலைவலி.
அதனால், சிம்புவால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பணம் பெற்றுக்கொண்டு நடிக்கவராத காரணத்தால் சிம்புமீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், பிறகு எடுக்கப்பட்ட முடிவில் சிம்பு ஒத்துக்கொண்ட அடிப்படையில் படங்களை முடித்துக் கொடுக்க ஏதுவாக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க…
Read More