எம்ஜிஆர் பெயரை தலைப்பில் வைத்து எத்தனை வில்லங்கம்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வெற்றிகரமான இயக்குநரான பொன்ராம் தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கி சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநராக அறியப்பட்டார்.
இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் ‘எம்ஜிஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் தொடங்கிய நாள் முதலே படத்தின் கதை ஒரிஜினல் இல்லை என்று பல தரப்பிலும் புகார் எழுந்தது….
Read More
காதல் மூலம் வாழ்வை மாற்றித் தரும் முயற்சியில் வாணி போஜன்
டிவி தொடர்கள் மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் வழியாக சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
‘ஓ மை கடவுளே’ படத்தின் பெரும் பலமாக மாறியிருக்கிறார் அவர் என்றால் மிகையில்லை. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனராம்.
இது பற்றி என்ன சொல்கிறார் வாணி..?
“பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட்…
Read More
இன்றும் செல்ஃபி எடுத்த விஜய் வீடியோ இணைப்பு
வருமான வரித்துறை ரெய்டுக்குப் பின் ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் இன்று நான்காவது நாளாக நடித்தார். நேற்று ஒரு வேன் மீது ஏறி திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது வைரலானது.
இன்றும் அப்படி ஷூட் முடிந்ததும் வெளியே ரசிகர்கள் கடல் அலையாய்த் திரண்டிருக்க, ஒரு பஸ்ஸின் மீது ஏறிய விஜய் ஆர்ப்பரித்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார். பின்பு அவர்களை நோக்கி உடலை வளைத்து வணங்கினார்.
பின்பு நேற்றைப் போலவே செல்ஃபி எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டுக் கீழே…
Read More
நிறைய நடிகர்கள் வாழ்த்த வர்ரேன்னாங்க ஆனா வரலை – ஜித்தன் ரமேஷ்
நாயகி ஹீனா ஸஹா –
“இது என் முதல் தமிழ்ப்படம். இந்தப்படத்தில் நடித்ததை பெரிய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் நன்றாக தமிழ் பேசுவேன்….
Read More
விஜய் நேரில் ஆஜராக ஐடி துறை சம்மன் – ஆஜராகாத விஜய் தரப்பில் கோரிக்கை
ரஜினியை வளைக்கவும் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவும் செய்கிறது மத்திய அரசு
எப்போதுமே மனதுக்குப் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் அதே சமயம் நேர்மையாகவும் பேசக் கூடியவர் இயக்குநர் அமீர்.
நேற்று ஒரு தனியார் விருது விழாவுக்கு வந்திருந்த அவரை மீடியாக்கள் பேட்டி கண்டபோது அதில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடு பற்றியும், விஜய்யை வருமான வரித்துறையினர் பாதி படப்பிடிப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது பற்றியும் கேள்விகள் கேட்கப் பட்டன.
அந்தக் கேள்விகளுக்கு நிதானமாக ஆனால் நேர்மையாக பதிலளித்தார் அமீர். அதில் வருமான வரி சோதனை…
Read More
ரசிகர்களுடன் செல்பி எடுத்து மாஸ் காட்டிய விஜய் – எக்ஸ்க்ளூசிவ்
விஜய்யை வருமான வரித்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோதே தெரியும், இது விஜய்யின் மாஸை இன்னும் அதிகரிக்கும் என்று.
போதாக்குறைக்கு அங்கே படப்பிடிப்பு நடத்த விடக்கூடாதென்று பாஜக ஆதரவாளர்கள் கொடி பிடித்தார்களா இன்னும் விஸ்வரூபம் எடுத்தது விஜய்யின் ‘மாஸ்’.
அதேபோல் நெய்வேலியில் படப்பிடிப்பை விஜய் தொடர, கடந்த மூன்று நாள்களாக விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த நெய்வேலிப் பகுதியில் குவிந்து போலீஸார் தடியடி நடத்தும் அளவுக்கு ஆனது.
மூன்றாவது நாளாக, நேற்றும் குவிந்த தன் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத…
Read More
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனுஷ் 40 படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
கடந்த தலைமுறையில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் இன்னொரு முகமாக தாதா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்பட்டார்கள். அந்த வகையில் தனுஷ் இன்னும் போலீஸாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது கார்த்திக் சுப்புராஜின் படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருஷம் வாஷிங்டன் நகரில் ஆரம்பித்து அதற்குப் பின் திருநெல்வேலியில் நடைபெற்று தற்போது சென்னை மாநகரத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கூடவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்…
Read More
சர்வர் சுந்தரத்தில் கவர்ச்சி விருந்து
காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று பல திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.
அதில் ஒன்று சந்தானம் மற்றும் வைபவி நடித்த சர்வர் சுந்தரம். இந்த படத்தில் இடம்பெறும் ‘கம கம சமையல்’ என்னும் பாடலில் லிரிக்கல் வீடியோ சில பல வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் உணவுப்பொருட்கள் அந்த வீடியோ முழுவதும் இடம்பெற்று இருந்துச்சு. அந்த வீடியோ வெளியாகி…
Read More
கை படாமல் நடிப்பது எப்படி – பாக்ஸர் நடிகை வேதனை
கிக் பாக்ஸிங் சேம்பியன் ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையானார். அதிலும் குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடித்திருந்தார்.
தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை கடவுளே திரைப்படம் காதலர் தினத்தன்று திரைக்கு வருகிறது.
இந்நிலையில் ரித்திகா சிங் தனது சமீபத்திய பேட்டியில், ‘தமிழில் நான் நடித்த முதல் படம் வெற்றி பெற்றாலும் அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காதது எனக்கு பெரிய வருத்தம் தான்.
ஒருவேளை நான் ஹிந்தி, தெலுங்கு படங்களுக்கு சென்றது கூட அதற்கு காரணமாக…
Read More