
இலங்கை தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த லோஸ்லியா தமிழ் படங்களில் நடிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர்.
இங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் இடம்பெற்று அதில் அவருடன் பிக்பாஸ் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த கவினுடன் காதல் வசப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க அறியப்பட்டவர்.
பிக்பாஸ் புகழுக்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர் சமீபகாலமாக நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது தந்தையான மரியநேசன் மாரடைப்பால் கனடாவில் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மரிய நேசனும்…
Read Moreஎட்டு மாதங்கள் பூட்டிக் கிடந்த தியேட்டர்களை தூசி தட்டி திறக்க… தீபாவளியே வந்து விட்டது. உச்ச ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டாலே தியேட்டர்களில் தீபாவளிதான் என்றிருக்க, அப்படி இல்லாத இந்த Post Corona தீபாவளியில் ரசிகர்கள் கொண்டாட வந்திருக்கும் ஒரு படம்தான் பிஸ்கோத்.
பிஸ்கட் என்பதன் வழக்குச் சொல்தான் பிஸ்கோத். ஆங்கிலம் தமிழ் நாக்குகளில் புழக்கத்துக்கு வராத காலங்களில் பிஸ்கட் மட்டும் புழக்கத்துக்கு வந்துவிட வாயில் பிஸ்கட்டை அடைத்து மென்றுகொண்டே சொன்னார்களோ என்னவோ, அப்படி வந்ததுதான் பிஸ்கோத்….
Read Moreகொரோனா அபாயத்தில் எட்டு மாதங்கள் மூடிக் கிடந்தபின் தீபாவளியன்று திறக்கப்பட்ட திரையரங்குகளில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த மீட்சி பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது…
கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100 சதவிகித நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள்.
ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால்…
Read Moreசந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் பிஸ்கோத். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக தியேட்டருக்கு சென்று இருக்கிறார் சந்தானம்.
அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், கொரோனா பாதிப்பில் சினிமா துறை 100 சதவிகிதம் அடிபட்டு இருக்கிறது. பிஸ்கோத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம். அப்புறம் திரையரங்குகள் திறப்பதால் அவசரசரமாக வெளியிட்டோம்.
மக்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று…
Read Moreசினிமா தியேட்டரில் சமூக இடைவெளி வேண்டும் என்று சொல்லிதான் அரசு அனுமதி கொடுத்துள்ளது..
ஆனால் உள்ளூர் தியேட்டர் களில் அப்படி ஒரு விஷயமே கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இன்று மாலை வெற்றி தியேட்டரில் மாஸ்டர் டீசர் வெளியீட்டின் போது நடந்தக் காட்சியைப் பாருங்களேன்.
இப்படி நெருக்கி அடித்து இணையும் கூட்டத்தை அந்த இயக்குனர் செல்பியும் எடுத்திருக்கிறார். அதை இணையத்திலும் பரவ விட்டிருக்கிறார்.
இதை அரசு கவனத்துக் கொண்டு போனால் அந்த தியேட்டரே சீல் வைக்கப்படும் என்பதை அறிந்தேதான் இச்செயலை செய்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.
டீசருக்கு…
Read Moreகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன.
இந்த நிலையில், தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு…
Read More