October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சட்டமும் நீதியும் (Zee 5 ஒரிஜினல்) சீரிஸ் விமர்சனம்

by by Jul 18, 2025 0

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்கிறோம். ஆனால் அதில் பெறப்படும் நீதி அப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்பதுதான் இந்தக் கதையின் வாயிலாக இதன் எழுத்தாளர் சூரியபிரதாப் சமுதாயத்தின் முன் வைக்கும் கேள்வி.

தலைப்பைப் போலவே இதன் முழுக் கதையும் நீதிமன்றத்தையும் ஒரு வழக்கையும் சுற்றியே வருகிறது.

நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு ஓரமாக மேசை நாற்காலியைப் போட்டுக்கொண்டு நோட்டரி பப்ளிக்காக இருந்து வருகிறார் கதையின் நாயகன் சரவணன். நீதிமன்றத்துக்குள் வழக்காடும் வழக்கறிஞர் எவரும் அவரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றாலும்…

Read More

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !

by by Jul 17, 2025 0

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது. 

இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த…

Read More

டிரெண்டிங் திரைப்பட விமர்சனம்

by by Jul 17, 2025 0

மனித மனம் வக்கிரங்கள் நிறைந்தது. அடுத்தவர் வாழ்க்கைக்குள் எட்டிப்பார்த்து அவர்களின் உணர்ச்சிகளைக் களவாடும் எண்ணம்தான் இன்றைக்கு உலகமெங்கும் டிரெண்ட் ஆக இருக்கிறது.

அதை வைத்தே இன்றைய ஆன்லைன் யுகம் யூடியூப் முதற்கொண்டு எல்லாவற்றிலும் டிரெண்டிங் ஆக்குவதற்காக எந்த எல்லைக்கும் சென்று கொண்டிருக்கும் ஆபத்தை ஒரு அபாய சங்காக ஊதி இருக்கிறார் இயக்குனர் சிவராஜ்.என்.

ஆனால், அதையும் இன்றைய டிரெண்டிங் நிலையிலேயே ‘ பிக்பாஸ்” பாணியில்  சொல்லி இருப்பதுதான் இப்படத்தின் ரசிக்கத்தக்க அம்சம்.

காதல் மணம் புரிந்த கலையரசனும், பிரியாலயாவும் யூடியூபில்…

Read More

ஜென்ம நட்சத்திரம் திரைப்பட விமர்சனம்

by by Jul 17, 2025 0

வழக்கமான பேய்ப் பட டெம்ப்ளேட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஆனால் இதில் ஆவி எடுக்கும் உயிர்களை விட வில்லன் எடுக்கும் உயிர்கள் அதிகம். 

எல்லாவற்றுக்கும் பணம்தான் காரணம் என்று கடைசியில் அதற்கு மொக்கையான ஒரு காரணமும் சொல்கிறார் இயக்குனர் பி.மணிவர்மன் .

நாயகனாக தமன் ஆக்ஷன், அவருக்கு இயக்குனராகும் கனவு இருக்கிறது, அதே அளவுக்கு அவர் கண்டிஷனும் போடுவதால் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திரிகிறார்.

கூடவே மால்வி மல்கோத்ராவுடனான நட்பும், காதலும் கூட இருக்கிறது. 

இவர்களின் நண்பர்கள் டீமில் மைத்ரேயா, ரக்ஷா…

Read More

96 பிரேம்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது..!

by by Jul 16, 2025 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். 

உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து…

Read More

கெவி திரைப்பட விமர்சனம்

by by Jul 16, 2025 0

கொடைக்கானலுக்கு கீழ் சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பகுதிதான் ‘ வெள்ள கெவி’. இங்கு வாழும் பழங்குடியின மக்களை டோலி தூக்க வைத்துதான் வெள்ளைக்காரர்கள் கொடைக்கானலையே கண்டுபிடித்தார்கள் என்ற முத்தாய்ப்புடன் ஆரம்பிக்கிறது படம். 

சரி… அதற்கு என்ன என்கிறீர்களா?

ஆனால், அப்போதிருந்து அந்த கெவி பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வதற்கான வசதிகளும் கற்காலத்திலேயேதான் இருக்கின்றன. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டு போட்டு ஒரு எம்எல்ஏ வை தேர்ந்தெடுத்தாலும் இவர்கள் பகுதிக்கு சாலை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட எந்த…

Read More

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

by by Jul 15, 2025 0

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் ,…

Read More

பான் இந்தியா படம் என்றால் விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர்

by by Jul 15, 2025 0

 ‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் வெளியீட்டு முந்தைய நிகழ்ச்சி!

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி ஜூலை…

Read More

உசுரே டீமை பார்க்கும்போது சென்னை 28 டீம் நினைவுக்கு வருது..! – நடிகர் சிவா

by by Jul 15, 2025 0

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் “உசுரே” திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர் பேரரசு, மிர்ச்சி சிவா இயக்குனர் சுப்ரமணிய சிவா, இசையமைப்பாளர் சி சத்யா, லோகேஷ் அஜில்ஸ், இயக்குனர் வாலி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில்

தங்கதுரை அவர்கள் பேசியது அனைவருக்கும் வணக்கம் நம்ம படத்தை…

Read More

சண்டை சச்சரவுகளுக்கு இடையில்தான் தலைவன் தலைவி படம் தொடங்கியது..! – விஜய் சேதுபதி

by by Jul 14, 2025 0

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில்…

Read More