ஒரு இயக்குனரின் கனவு நனவான கதைதான் செஞ்சி
சினிமா தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’.
தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்றுக் குடும்பம், பிள்ளைகள் என்று பொருளாதார அமைதிக்கான அனைத்தையும் முடித்துவிட்டுத் தனது இளமைக் காலத்துக் கனவான சினிமா முயற்சியில் இறங்கிய கணேஷ் சந்திரசேகர் என்பவர் ஜி.சி என்கிற பெயரில் இயக்கி, நடித்து ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் தான் ‘செஞ்சி’.
இதை…
Read More
Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.