January 23, 2026
  • January 23, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்பட விமர்சனம்

by by Jan 22, 2026 0

ஹாட்ஸ்பாட் படத்தின் சர்ச்சைகளும் அது தந்த வெற்றியும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு மேலும் உற்சாகம் தர அதன் இரண்டாவது பாகத்தையும் வெறும் 2 என்றில்லாமல் 2 மச்சாகவே கொடுத்திருக்கிறார்.

இதில் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைகள் மூன்று. அந்த மூன்று கதைகளையும் தாங்கிச் செல்லும் நான்காவது கதையும் உண்டு. 

கடந்த படத்தை போலவே இதிலும் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைகளைச் சொல்லுகிறார் பிரியா பவானி சங்கர். 

அதன்படி முதல் கதை சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களைக் குறி வைக்கிறது. வெறிபிடித்த ரசிகர்களாக இருந்து…

Read More

மாய பிம்பம் திரைப்பட விமர்சனம்

by by Jan 19, 2026 0

2005-ன் காதல் கதை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எல்லா காலத்திலும் காதலில் தவறான புரிந்து கொள்ளல்கள் இப்படித்தான் வந்து முடியும்.

படத்தில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிற ஒரு விஷயம் எல்லோரும் புது முகங்கள் என்பதுதான்.

காதல் பற்றிய மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள். அதில் ஒருவன் கிட்டத்தட்ட காமக்கொடூரன். ஆளில்லாத வீடுகளில் புகுந்து ‘ ஆன்ட்டி’ களை கரெக்ட் பண்ணும் குணம் உள்ள அவனது லீலைகளை கேட்டு உடனிருக்கும் நண்பர்களும் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே அப்படிப்பட்ட…

Read More

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம் (Rating 3.5/5)

by by Jan 15, 2026 0

கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள். 

அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது. 

அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகள் யாரோ ஒருவனைக் காதலிப்பதாக இளவரசு தவறாக புரிந்து கொண்டு ஊருக்கு சொன்னதில் அந்தப்பெண் பஞ்சாயத்து போர்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால் களை இழந்து போகும்…

Read More

வா வாத்தியார் திரைப்பட விமர்சனம்

by by Jan 15, 2026 0

இதுவும் ஒரு சூப்பர் ஹீரோ கதைதான்..!

ஆனால் இந்த சூப்பர் ஹீரோ கற்பனை கதாபாத்திரம் அல்ல. தமிழர்களின் மனதிலும், உணர்விலும் இரண்டறக் கலந்து விட்ட நிஜ சூப்பர் ஹீரோவான எம்ஜிஆரை வைத்து இதில் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி.

அந்த முயற்சியில் அவர் பின்னி எடுத்திருக்கிறாரா என்று பார்ப்போம்.

எம்ஜிஆரின் பரம ரசிகர்களாக இருக்கும் ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோயில்’ படத்தின் ரீலை வாங்கி வந்து ஒரு தியேட்டரில் கொடுத்து ஓட்டச் சொல்லுகிறார்கள்.

காரணம், எம்ஜிஆர்…

Read More

அனந்தா திரைப்பட விமர்சனம்

by by Jan 13, 2026 0

புட்டபர்த்தியில் வாழ்ந்த ஆன்மிக குருவான சத்யசாய் பாபாவின் அற்புதங்களைச் சொல்லும் கதை.

அவரது இறுதிக் காலத்தில், தன் ஆத்ம பக்தர்களான ஐவரை உலகெங்கிருந்தும் அழைக்கிறார். அந்தப் பணியை நிழல்கள் ரவி செய்து முடிக்க, அந்த அழைப்பின் பேரில் மும்பை தொழிலதிபர் ஜெகபதி பாபு,, பாலக்காட்டைச் சேர்ந்த ஒய்.ஜி.மகேந்திரா, காசியைச் சேர்ந்த சுகாசினி மணிரத்னம், சென்னையைச் சேர்ந்த அபிராமி வெங்கடாச்சலம், கலிபோர்னியாவை சேர்ந்த அமெரிக்கர் ஜான் ஆகிய ஐவரும் புட்டபர்த்தி வருகிறார்கள்.

வந்து தங்கள் வாழ்க்கையில் சத்ய சாய் செய்த…

Read More

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

by by Jan 10, 2026 0

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம். 

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம்.

1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின்…

Read More

தி ராஜா சாப் திரைப்பட விமர்சனம்

by by Jan 9, 2026 0

இந்தியாவின் பிரமாண்ட படமாக, பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான படம்.

அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா..? பார்க்கலாம்..!

அம்புலிமாமா கதை அளவுக்கு மிக மெல்லிய லைன். காணாமல் போன தன் கணவன் நினைவாகவே வாழ்ந்து வரும் ஞாபக மறதிப் பாட்டிக்காக தன் தாத்தாவைத் தேடிப் போகும் பேரனின் கதை.

அந்தத் தாத்தா யார்..? அவர் ஏன் காணாமல் போனார்..? பாட்டி கண்ணில் படாமல் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? தாத்தாவை பேரன் கண்டுபிடித்தாரா என்ற…

Read More

சல்லியர்கள் திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2026 0

‘ மேதகு’ படத்தை இயக்கியதன் மூலம் உலகளாவிய தமிழர்களின் இதயத்தில் இடம் பெற்ற இயக்குனர் கிட்டு இப்படத்தின் மூலம் நாம் அதிகம் அறியாத தமிழ் ஈழப் போரில் முக்கிய அங்கம் வகித்த மருத்துவப் பணிகள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறார்.

போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திலேயே காயம் பட்டவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சிகிச்சை வேண்டி அங்கங்கே பூமியில் பதுங்கு குழிகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பணிகளும் அதற்கான சவாலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.

அப்படி மருத்துவப் பணிகளை மேற்கொண்டவர்களே சல்லியர்கள்…

Read More

டியர் ரதி திரைப்பட விமர்சனம்

by by Jan 2, 2026 0

பெண்கள் என்றாலே ஒதுங்கிப் போகும் ஃபோபியா உள்ள ஒருவனுக்கும் ஆண்களுடனேயே காலத்தை கழிக்க நேரும் பாலியல் தொழிலாளி ஒருத்திக்கும் ஒரு நாள் பொழுது உண்மைக் காதலைப் புரிய வைப்பதுதான் கதை.

இதை நேரடியான திரைக்கதை உத்தியில் சொல்லாமல் மாற்று சினிமாவாக தந்திருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.மணி. அத்துடன் டார்க் காமெடியையும் முயற்சித்து இருக்கிறார்.

அப்படி பெண்களைக் கண்டால் நடுங்கும் சரவண விக்ரமின் பதட்டத்தை போக்க, பாலியல் தொழிலாளியான ஹஸ்லி அமானுடன் ஒரு நாளைக் கழிக்க நண்பன் ஒருவன் ஏற்பாடு…

Read More

பருத்தி சினிமா விமர்சனம்

by by Dec 26, 2025 0

ஊருக்கு வெளியே தனிமையில் வசிக்கும் சோனியா அகர்வால் மனதில் பலவிதமான குழப்பங்களுடன் வாழ்கிறார் என்பது படத்தின் ஆரம்பமாக இருக்கிறது. 

ஊருக்குள் தனது இரண்டு பேரன்களை வைத்துக்கொண்டு படாத பாடுபட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா. 

இன்னொரு பக்கம் சற்றே வசதியான குடும்பத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த அண்ணன் ஜாதி வெறி கொண்டவராகவும் தம்பி சமத்துவத்துடன் வாழ்பவராகவும் இருக்கிறார்கள்.

சமத்துவ விரும்பியின் மகளும் பாட்டியம்மாவின் இரண்டாவது பேரனும் ஒரே பள்ளியில் படித்து வருவதுடன் நட்புடனும் முளைவிடும் காதலுடனும்…

Read More