July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

கறிக்கடை உரிமையாளர்களை கூல் ஆக்கிய விஜய் ரசிகர்கள்

by by Sep 29, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம்.

பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Vijay Fans Cool Down Kovai Protesters Vijay…

Read More

நான் ஒரு கோடி சம்பளம் வாங்க கூடாதா – அப்புக்குட்டி

by by Sep 28, 2019 0

கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன்.

அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ…

Read More

விஜய் காப்பி பேச்சு வைரல் வீடியோவுக்கு எதிர் வீடியோ

by by Sep 27, 2019 0

சில தினங்களுக்கு முன் நடந்த பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பேச்சு பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசிய பேச்சின் அப்பட்டமான காப்பி என்று நிரூபித்து ஓரு வீடியோ வைரலானது. 

கவிதா பேசிய வீடியோவையும், விஜய் பேசிய வீடியோவையும் சேர்த்துப் போட்டு கதையை மட்டும் காப்பியடிக்கிற கோலிவுட்டில் பேசறதைக் கூட அப்படியே காப்பியடிக்கிறார்கள் என்ற ரேஞ்சில் கிண்டல் செய்தார்கள்

அந்த வீடியோ…

Read More

யூ டியூப் சேனல்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கணும் – நடிகை ஆதங்கம்

by by Sep 27, 2019 0

சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, ஜெயசித்ரா, ரேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசாக உள்ள நிலையில் இந்த 100% காதல்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ‘கடலோர கவிதைகள்’ ரேகா பேசியதிலிருந்து…

“இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என ஆசைப்படறேன்.

ரஜினி சார், விஜய் சார், அஜித் சார்…

Read More

சூரரைப் போற்று படத்தை முடித்தார் சூர்யா

by by Sep 26, 2019 0

‘காப்பான்’ வெற்றிக்குப் பின் சூர்யா நம்பிக்கை வைத்து நடித்துக் கொண்டிருந்த படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பாக ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்குகிறார்.

சூர்யாவின் 38வது படமான இதில் அவருடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் நடிக்கிறார்கள். சண்டிகரில் ஷூட்டிங் நடந்த இந்தப்ப்படத்தின் கதை கேப்டன் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததாக நம்பப்படுகிறது. 

நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவைக்…

Read More

ராதாரவிக்கு நடிக்க வாய்ப்பு தராதீர்கள் – தமிழ் இயக்கம் வேண்டுகோள்

by by Sep 26, 2019 0

எதையாவது பேசிவிட்டு பிரச்சினைக்குள்ளாவது நடிகர் ராதரவிக்கு ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட நடிகர் ராதாரவி “இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வது வீண். எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கம் மறந்துவிட்டது. தெலுங்கனின் விழாவை தெலுங்குகாரன்தான் கொண்டாடுகிறான்..!”என்று பேசினார்

இது தொடர்பாக தமிழ்த் தன்னுரிமை இயக்கம் விடுத்த வேண்டுகோளில் “தமிழ்மொழியைப் பேசுவது வீண்.. என நம் தாய்த்தமிழை இழிவாகப் பேசிய…

Read More

எம்ஜிஆர் மகன் ஆகும் சசிகுமார் ஷூட்டிங் தொடக்கம்

by by Sep 25, 2019 0

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

’எம்.ஜி.ஆர் மகன் ‘என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி.

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர்…

Read More

கார்த்தி படப்பிடிப்பில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

by by Sep 25, 2019 0

தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ மூலம் திரையைக் காணவிருக்கும் கார்த்தி அடுத்து நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘கார்த்தி 19’ என்று பெயரிட்டிருந்தார்கள்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப்படத்துக்கு இப்போது ‘சுல்தான்’ என்று பெயரிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் கார்த்தி ஜோடியாக டோலிவுட் வரவு ‘ராஷ்மிகா மன்டன்னா’ நடிக்கிறார்.

அத்துடன் இது திப்பு சுல்தான் பற்றிய கதை என்றும் தகவல்கள் பரவ, இந்தக் காரணம் போதாதா ஆர்ப்பாட்டம் செய்ய..?

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெறுவதை அறிந்த பா.ஜ.க. – இந்து முன்னணி,…

Read More

மூட வேண்டியதை மூடி காட்ட வேண்டியதை காட்டணும் – கயல் சந்திரன்

by by Sep 24, 2019 0

அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் ‘2 மூவி பஃப் ‘ நிறுவனம் சார்பில் ரகுநாதன் பிஎஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தில், கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆன் போப், அர்ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.

எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கயல் சந்திரமெளலி பேசியதிலிருந்து…

“கயல் படத்திற்கு பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது…

Read More

சர்வதேச விருதுகளுடன் மீண்டும் வருகிறார் இயக்குநர் மதுமிதா

by by Sep 24, 2019 0

‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

Read More