‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம்.
ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன.
Ajith Kids Anoshka Aadvik
அதுவும் ட்விட்டரில் மற்ற சினிமா டிரைலர், பாடல், செய்திகளைத் தாண்டி இந்திய டிரெண்டிங்கில் இதுதான் முதலில் இருக்கிறது.
அஜித் படங்களின் செய்தி அறிவிப்புகள்தான் என்றில்லை. அஜித்தின் குழந்தைகளும் இன்று இந்திய டிரெண்டிங்கில் முதலிடம் பெற்று விட்டன.
அவர் டிசைன் அப்படி..!