November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing இந்தியா

முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

by by Sep 19, 2018 0

கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது இஸ்லாத்தில் மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இருந்தும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு தெரிவிக்க, இம்மசோதா அப்படியே விடப்பட்டது..

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும்…

Read More

வாய்பாய் மறைவு – குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

by by Aug 16, 2018 0

உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் இன்று மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட வாஜ்பாய் புகழுடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட உடலுக்கு முதலில் வாஜ்பாய் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர்…

Read More

மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தண்ணீர் தரலாம் – குமாரசாமி

by by Jul 23, 2018 0

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே இருக்கும் நான்கு அணைகள் போதாதென்று தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ‘மேகதாது’வில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். கர்நாடகாவில் உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரிய அளவிலானதாக இருக்கும்.

ஓப்பந்தப்படியே சரியாக தண்ணீர் திறப்பதில்லை என்ற நிலையில் புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அணை கட்ட…

Read More

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகை

by by Jul 19, 2018 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது.

இதன் விபரம்…

மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், 2006-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கான அனுமதியை முறையாகப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் இந்த அனுமதியைப் பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. டெல்லி பாட்டியாலா…

Read More

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக புதிய வியூகம்

by by Jun 25, 2018 0

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பா.ஜ.க உள்பட அனைத்து அரசியல் கட்சிக்ளுமே தீவிரமாக திட்டம் தீட்ட ஆரம்பித்துள்ளன.

இவற்றில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க புதிய வியூகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பா.ஜ.கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த 10-ந்தேதி சத்தீஸ்காரில் தொடங்கி நாடெங்கும் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பா.ஜ.க வகுத்துள்ள புதிய வியூகங்களின் ஹைலைட்…

⦁ ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள…

Read More

இன்று ராகுல் காந்தியை சந்தித்த கமல் நாளை சோனியாவைச் சந்திக்கிறார்

by by Jun 20, 2018 0

அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்த கமல், பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்த கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார். தேர்தல் ஆணையமும் கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் ஏதும் இருந்தால் தெரிவிக்க அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், எந்த ஆட்சேபமும் வரவில்லை.

இந்நிலையில் அவரை இன்று தேர்தல் ஆணையம்…

Read More

காவிரி பற்றி கமலுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியாது – தேவே கவுடா

by by Jun 19, 2018 0

ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா, நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்து…

“கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொன்னாலும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பதால் அனைத்து தரப்பும் பேசி விவாதித்துதான் முடிவெடுக்க…

Read More

காவிரி நீரைப் பகிர்வதில் இந்த வருடம் சிக்கல் இருக்காது – குமாரசாமி

by by Jun 15, 2018 0

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இன்று மதுரைக்கு வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதிலிருந்து…

இப்போது கர்நாடகாவில் பருவமழை பெய்து வருவதால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது

பருவ மழை தொடர்ந்தால் நடுவர் மன்ற உத்தரவின்படி மாதா மாதம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுவதில் சிக்கல் இருக்காது.

கர்நாடகாவில் மழை பெய்து வருவதை அடுத்து, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக…

Read More

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் சவால் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு

by by Jun 13, 2018 0

இன்றைய ‘ஹாட் டாப்பிக்’கே பிரதமர் மோடி வெளியிட்ட ‘ஃபிட்னஸ் சவால்’ வீடியோதான். அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இதன் பின்னணி தெரிந்திருக்கலாம்.

“அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் உடல் உறுதியுடன் இருந்தால்தான் நாடும் உறுதியுடன் இருக்கும்…” என்று வலியுறுத்தி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார்.

ட்விட்டரில் அதை வெளியிட்டது மட்டுமல்லாமல் அதில் விராத் கோலி, ஹ்ரித்திக் ரோஷன், சாய்னா நேவால்…

Read More

பெட் ரோல் விலையை ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும் – ப.சிதம்பரம்

by by Jun 11, 2018 0

இன்று டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதிலிருந்து…

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கு வேளையிலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறையும்.

இதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைக்க முடியும். பெட்ரோல், டீசலின் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய…

Read More