April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • காவிரி பற்றி கமலுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியாது – தேவே கவுடா
June 19, 2018

காவிரி பற்றி கமலுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியாது – தேவே கவுடா

By 0 1099 Views

ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் தேவே கவுடா, நிருபர்களுக்கு பேட்டியளித்ததில் இருந்து…

“கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொன்னாலும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பதால் அனைத்து தரப்பும் பேசி விவாதித்துதான் முடிவெடுக்க வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் விவசாய முறையை மாற்றி அமைப்பதற்காக, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, பிரதமர் மோடியுடனும் மத்திய நீர்வளத்துறை செயலாளரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

எங்கள் அணைகளில் நீர் இருப்பு குறித்து ஆராய்ந்து, ஆணையம் என்ன மாதிரியான பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறதோ அதன்படி விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து பயிர்களை நடவு செய்ய வேண்டும்..!”