April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தண்ணீர் தரலாம் – குமாரசாமி
July 23, 2018

மேகதாது அணை கட்டினால் தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தண்ணீர் தரலாம் – குமாரசாமி

By 0 938 Views

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே இருக்கும் நான்கு அணைகள் போதாதென்று தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் ‘மேகதாது’வில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டிருப்பது தெரிந்த விஷயம்தான். கர்நாடகாவில் உள்ள அணைகளிலேயே இது மிகப்பெரிய அளவிலானதாக இருக்கும்.

ஓப்பந்தப்படியே சரியாக தண்ணீர் திறப்பதில்லை என்ற நிலையில் புதிய அணை கட்டினால் வருகிற தண்ணீரும் நின்றுவிடும் என்று நம்பப்படுகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அணை கட்ட மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.

தற்போது கர்நாடகாவில் அதிக மழை பெய்ததன் காரணமாக பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேகதாது அணையை கட்டும் கோரிக்கையை முன்வைத்து தமிழக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து அவர் கூறியிருப்பதிலிருந்து…

“கர்நாடகாவில் அதிக மழை பெய்திருப்பதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. அணை நிரம்ப போகிறது. கர்நாடகாவிளிருந்து தண்ணீர் செல்லும் பவானி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இரு ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அதிக அளவில் இருக்கும் என்பதால் அந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு மேகதாது அணை பொருத்தமாக இருக்கும். அந்த அணை கட்டப்பட்டால் அதில் தண்ணீர் தேக்கி வைத்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பெங்களூருக்கு அனுப்ப முடியும். மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்திற்கும் தேவைப்படும் காலங்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கும் வசதியாக இருக்கும். எனவே இதற்கு தமிழகம் அனுமதிக்க வேண்டும்.

இதற்காக நான் சென்னை சென்று தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரையும் விவசாய பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுவேன். மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு எந்த நேரத்தில் தண்ணீர் வழங்கும் பிக்சட் டெபாசிட் போல இங்கு தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். இப்போது தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 85 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகள் கஷ்டம் எனக்கு தெரியும். மேகதாது அணை மூலம் இன்னும் தமிழக விவசாயிகளுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும்..!”