September 16, 2024
  • September 16, 2024
Breaking News
June 25, 2018

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக புதிய வியூகம்

By 0 1137 Views

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பா.ஜ.க உள்பட அனைத்து அரசியல் கட்சிக்ளுமே தீவிரமாக திட்டம் தீட்ட ஆரம்பித்துள்ளன.

இவற்றில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க புதிய வியூகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக பா.ஜ.கட்சியின் தலைவர் அமித்ஷா கடந்த 10-ந்தேதி சத்தீஸ்காரில் தொடங்கி நாடெங்கும் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பா.ஜ.க வகுத்துள்ள புதிய வியூகங்களின் ஹைலைட்…

⦁ ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரச்சினைகளையும், அங்கு எதிர்க்கட்சிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு அந்தந்த மாநில வெற்றிக்கு கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துவது. இதன் அடிப்படையிலேயே அமித்ஷாவின் சுற்றுப்பயணம் அமைகிறது.

⦁ பாராளுமன்றத்தின் 534 தொகுதிகளிலும் தனித்தனி தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது. குறிப்பிட்ட தொகுதி தொடர்பான அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிக்கும் அந்தப் பொறுப்பாளர் அதே பாராளுமன்ற தொகுதியைச் சாராதவராக இருப்பார்.

⦁ ஊடகத்துறை பணிகளுக்காக 3 நபர்கள், பத்திரிகைகள் தகவல் பரிமாற்றத்திற்காக 3 நபர்கள் மற்றும் மத்திய மாநில செயல் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக 2 நபர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழு ஒன்றும் தேர்தல் ஆயத்தப் பணியக்ளுக்காக அமைக்கப்படவிருக்கிறது.

⦁ மத்திய அரசின் திட்டங்கள் மக்களை எந்த அளவிற்கு சென்றடைந்துள்ளன என்பது பற்றியும் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக சந்திக்கவும், கூட்டணி அமைக்க வாய்ப்புள்ள கட்சிகள் குறித்தும் விவரங்களைச் சேகரித்து மாநில கட்சியினர் மேலிடத்திற்கு விரிவான அறிக்கை அனுப்ப வகை செய்வது.

இந்த வியூகங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யவே தன் சுற்றுப்பயணத்தை அமித்ஷா அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. பாரளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்துக்குக் குறைவான நாள்களே உள்ளன.