August 31, 2025
  • August 31, 2025
Breaking News
January 29, 2020

அஜித் துடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் மறுப்பு..?

By 0 697 Views

அசின் தொடங்கி இலியானா, தமன்னா என்று பல நடிகைகள் பாலிவுட் போனார்கள் . ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது.

போன வேகத்திலேயே பலர் திரும்பி வந்தார்கள். இதில் அசின் உஷாராக திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்த வரிசையில் நடிகை டாப்ஸி மட்டும் இன்னமும் பாலிவுட்டில் போராடிக் கொன்டிருக்கிறார்.

பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோன் (கோச்சடையான்), சோனாக்‌ஷி சின்ஹா (லிங்கா), ஹூமா குரோஷி (காலா), ஷ்ரத்தா கபூர் (சாஹோ), வித்யாபாலான் (நேர்கொண்ட பார்வை) ஆகியோர் தமிழில் நடித்தனர்.

அவர்களில் ஒருவர் கூட மீண்டும் தமிழ் பக்கம் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க யாமி கவுதம், பரிணிதி சோப்ரா போன்றவர்களை கேட்டனராம். ஆனால் அவர்கள் யாரும் என்ன காரணத்தாலோ கால்ஷீட் தரவில்லை.

தற்போது காலா படத்தில் நடித்த ஹூமா குரோஷியிடம் கால்ஷீட் கேட்டிருக்கின்றனர். அவர் நடிப்பதுபற்றி இன்னும் உறுதியாகவிலையாம்.

வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் என்றாலும வலிமை படத்தை பொறுத்தவரை இதுவரை அஜீத் தவிர வேறு நடிகர், நடிகைகள் யார் யார் நடிக்கின்றனர் என்பது பட தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.

ஆனால் அஜீத் நடிக்கும் சண்டை காட்சி ஐதராபாத்தில் படமாகி வருகிறது. தென்னிந்திய நடிகைகள் பலர் பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் காட்டும்போது பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படத்தில் நடிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்பது புரியாதபுதிராக இருக்கிறது.

மீண்டும் நயன்தாரா, காஜல் என்று பழைய வரிசையில் போய்விட போகிறார்கள்…