December 2, 2025
  • December 2, 2025

இப்போது எல்லா வில்லத்தனங்களையும் கதாநாயகர்கள் செய்கிறார்கள் – எஸ்.ஏ.சி வேதனை

by on February 18, 2025 0

கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு: ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் […]

Read More

அகரம் ஃபவுண்டேஷனின் புதிய கட்டிடம் புது நம்பிக்கையை தந்திருக்கிறது – சூர்யா

by on February 18, 2025 0

அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா  சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார்.  கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அகரம் பவுண்டேஷன் நிறுவனர் சூர்யா அவர்கள் பேசியதாவது, […]

Read More

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது வெள்ளிவிழாவை கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட்

by on February 17, 2025 0

ஃபார்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் தனது 25-வது வெள்ளிவிழாவை சிறப்பாக கொண்டாடிய கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் சென்னை: 17 பிப்ரவரி 2025: ரூ.2000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட், ஃபார்ச்சுனா 25 பணியாளர் தமிழ் நாடு மாநாட்டுடன் அதன் 25-வது வெள்ளி விழா நிகழ்வை பெரும் உற்சாகத்தோடு கொண்டாடியது. 1000-க்கும் அதிகமான கிளைகளுடன் இந்தியா முழுவதிலும் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் பிராண்டு தூதராக பிரபல […]

Read More

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

by on February 17, 2025 0

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.  மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார்.  இந்தத் திரைப்படம் – அதிரடியான […]

Read More

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்பட விமர்சனம்

by on February 16, 2025 0

மார்வெல் ஸ்டுடியோஸ்- இல் இருந்து வந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா தொடரின் நான்காவது படம் இது. ஒரு காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த போது சூப்பர் ஹீரோக்களைத் துரத்திய ராஸ் இப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்கிறார். முன்பு சூப்பர் ஹீரோக்கள் தேவையில்லை என்று நினைத்தவருக்கு இப்போது அதன் தேவை புரிகிறது.  அதனால் இதில் கேப்டன் அமெரிக்காவை அழைத்து புதிய அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கச் சொல்லி கேட்டுக்கொள்கிறார். இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் திடீரென தோன்றிய செலஸ்டியல் தீவில் இருக்கும் புதிய […]

Read More

ஒத்த ஓட்டு முத்தையா திரைப்பட விமர்சனம்

by on February 16, 2025 0

முன்னாள் நகைச்சுவை அரசன் கவுண்டமணியையும், இந்நாள் நகைச்சுவை இளவரசன் யோகி பாபுவையும் இணைத்து விட்டால் அது எத்தகைய வெற்றியை பெறும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைப் படம். அது நடந்ததா பார்க்கலாம்.  வீடு, வாசல், அன்பான மனைவி என்று வாழ்ந்து வரும் அரசியல்வாதி கவுண்டமணி ஒரு தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய காரணத்துக்காக ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார். அவரது கார் டிரைவராக யோகி பாபு இருக்கிறார். தன் வாழ்வில் நடந்த ஒரு சோகத்தின் […]

Read More

கண்நீரா திரைப்பட விமர்சனம்

by on February 16, 2025 0

இந்தக் காதலர் தினத்துக்கு மலேசியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ்ப் படம்.  கதிரவென் மற்றும் சாந்தினி கவுர் ஜோடி காதலர்களாக இருக்கிறது. அதேபோல் நந்தகோபால் மற்றும் மாயா கிளம்மி காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் காதல்தான் கதையா என்றால் இல்லை. முதல் ஜோடியில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் கதிரவென் தங்கள் திருமணத்துக்காக சாந்தினி கவுரை தயார்படுத்த நினைக்கிறார். ஆனால் சாந்தினியோ மேற்படிப்பு முடித்து வாழ்க்கையில் உயர்ந்த பிறகுதான் கல்யாணம் என்கிற குறிக்கோளுடன் இருக்கிறார். இதில் இருவருக்கும் […]

Read More

அது வாங்குனா இது இலவசம் திரைப்பட விமர்சனம்

by on February 16, 2025 0

தலைப்பைப் பார்த்துவிட்டு “எது வாங்குனா எது இலவசம்..?” என்றுதானே யோசிக்கிறீர்கள்..? வேறு என்ன வினைதான். ஒரு வேண்டாத வினையை நீங்கள் விலை கொடுத்து வாங்கப் போனால் அதன் விளைவு உங்கள் பின்னாலேயே இலவசமாய் துரத்திக் கொண்டு வரும் என்பதைத்தான் இயக்குனர் எஸ்கே.செந்தில் ராஜன் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாவட்டங்களையும் கலவர பூமியாகக் காட்டி ஆயிற்று, இனி வேறு என்ன மீதி இருக்கிறது என்று இயக்குநர் யோசித்து இருப்பார் போல. அதனால், இதுவரை இல்லாத விதமாக இதில் […]

Read More

2கே லவ் ஸ்டோரி திரைப்பட விமர்சனம்

by on February 16, 2025 0

காதலும், நட்பும்தான் காலம் உள்ளவரை சினிமா ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய காரணிகளாக இருக்கும். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தக் கால இளைஞர்களுக்காக காதலையும், நட்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார். குழந்தைப் பருவத்திலிருந்து நட்புடன் பழகி வரும் ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் பருவ வயது வந்தும் அதே நட்புடன் பழகி வருகிறார்கள். ஊர் உலகம், நண்பர்கள் ஏன் ஒரு கட்டத்தில் அவர்களது பெற்றோரே கூட அவர்கள் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார்கள்.  ஆனால் ஜெகவீரோ […]

Read More

பேபி & பேபி திரைப்பட விமர்சனம்

by on February 15, 2025 0

“அதென்ன பேபி & பேபி..?” என்று யோசிக்கிறீர்களா? கதைப்படி இரண்டு பேபிகள் தான் படத்தை நகர்த்திச் செல்கின்றன. எனவேதான் பேபி & பேபி..! ஒரு பக்கம் பெரிய ஜமீன்தாராக இருக்கும் சத்யராஜ் தன் மகன் ஜெய்க்கு பெரிய இடத்தில் திருமணம் முடித்து தன் ஜமீனைக் கட்டி ஆள அவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அப்பாவின் விருப்பத்திறகு மாறாக காதல் திருமணம் புரியும் ஜெய், சத்யராஜின் கோபத்துக்கு ஆளாகி வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். […]

Read More
CLOSE
CLOSE