April 9, 2026
  • April 9, 2026

பேட்ட விமர்சனக் கண்ணோட்டம்

by on January 13, 2019 0

படத் தொடக்கத்தில் ரஜினிக்கு ஒரு அறிமுகம் கொடுக்கிறார்கள். எப்படி..? கொஞ்சம் பில்டப் கொடுத்து முகம் காட்டாமல் 20, 30 பேரை அடித்துப் போட்டுவிட்டு நிற்கும் ரஜினியை ஊர் பேர் தெரியாத ஒரு அடியாள் ‘பொட்’டென்று அடித்து வீழ்த்திவிட்டு யாருக்கோ போன் போட்டு “நான் அடிச்ச அடியில அவன் செத்திருப்பான்…” என்று சொல்ல, அவன் பின்னாலேயே எழுந்து நிற்கும் ரஜினி அவனைப் பொளந்து விட்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..?” என்று ‘பொலிடிக்’கலாக மெசேஜ் சொல்கிறார். சரிதான்… ரஜினி […]

Read More

இளையராஜா75 டீசரை வெளியிட்ட 10 ஹீரோக்கள்

by on January 13, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தவிருக்கும் மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக  நடை பெற்றது. அதைத் தொடர்ந்து  டிக்கெட் விற்பனை ‘புக் மை ஷோ’ ஆன்லைனில்  பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.   பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் – கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பிரமாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. […]

Read More

மாணவிகளைப் பாடகிகள் ஆக்குகிறார் இசை ஞானி

by on January 12, 2019 0

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகிகளாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா.   அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே  அவரது  பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.   இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர்  கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன்  அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.   […]

Read More

விஷால் மணக்கப் போகும் பெண் இவர் இல்லையாம்

by on January 12, 2019 0

விஷால் தன் திருமண செய்தி உண்மைதான் என்று அறிவித்தாலும் அறிவித்தார். மீடியாக்களும், சமூக வலைதளங்களும் சுதாரித்து விட்டன. இரண்டு நாள்களாக செய்திகளில் விஷால் மணக்கப்போகும் பெண் இவர்தான் என்று ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் விஷால். அவரது மக்கள் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் ‘விஷாலின் மணமகள்’ என்று வெளி வந்து  பரவி கொண்டிருக்கும் செய்தி […]

Read More

ஓபிஎஸ் விஜயபாஸ்கர் தம்பிதுரைக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

by on January 11, 2019 0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.   இந்த விசாரணை ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் நடத்தப்பட்டது.   அவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் […]

Read More

ஹைகோர்ட் புதிய உத்தரவால் சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு

by on January 11, 2019 0

பொங்கல் பரிசாக அனைத்து ரே‌சன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன் ரூ. 1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை ஜேசுதாஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிட்டது. இதில் சிக்கல் என்னவென்றால் சர்க்கரை மட்டும் வாங்கும் ரே‌சன் அட்டைதாரர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 பேர் உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந்தேதி […]

Read More

கிரிஷ்ணம் விழாவில் பாக்யராஜ் சொன்ன உண்மை சம்பவம்

by on January 11, 2019 0

தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார். படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசியதிலிருந்து… “என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு […]

Read More

விஸ்வாசம் திரைப்பட விமர்சனம்

by on January 10, 2019 0

அஜித் ‘நடிப்பில்’ இப்படி ஒரு படம் பார்த்து நாளாகிறது – சென்டிமென்ட் அளவில்… ஒரு பாசக்காரத் தந்தையாக அவர் வரும் இந்தப் படம் அவர் கரியரிலேயே புதுசு.  இதற்கு முன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவர் இதேபோல் ஒரு பெண் குழந்தைக்குத தந்தையாக நடித்திருந்தாலும் அது சொன்ன செய்தி வேறு. ஒரு அப்பாவாக ஒரு பெண்குழந்தையின் அன்புக்கு ஏங்கும் இந்தப் பாசப்படைப்பு அஜித் ரசிகர்களைத் தாண்டி பொதுவான குடும்ப உறுப்பினர்களைக் குறிவைத்து சென்று சேரும். ஊர்த்திருவிழாவில் தொடங்கும் […]

Read More
CLOSE
CLOSE