January 15, 2025
  • January 15, 2025

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் கமல் – தமிழருவி மணியன்

by on June 4, 2018 0

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய ரஜினியின் பேச்சுக்குக் கமலும் ரஜினிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அது பற்றி தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையிலிருந்து… “திரு.கமலஹாசன், மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதை அவருடைய அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்வர் கனவு கலைந்துவிடக் கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும் சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் […]

Read More

ஏமன் புயலில் சிக்கிய இந்தியர்களை மீட்ட சுனைனா

by on June 3, 2018 0

‘மெகுனு’ புயலில் சிக்கி இந்தியர்கள் மூவர் உள்பட இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை கடந்த மாதம் 28-ம் தேதி பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும், இந்த புயலினால் சொகோட்ரா தீவில் 38 இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக இந்திய […]

Read More

எக்ஸ் வீடியோஸ் விமர்சனம்

by on June 3, 2018 0

தலைப்பைப் பார்த்துவிட்டு கிளுகிளுப்பான படம் என்று வரும் சபலிஸ்டுகள் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். ஆனால், அவர்களை உள்ளுக்கிழுத்து திருத்துவது… அல்லது அந்த செய்கை தவறு என்று உணரவைப்பதுதான் படத்தின் ‘நல்ல’ நோக்கம். அந்த வகையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சஜோ சுந்தரைப் பாராட்டியே ஆக வேண்டும். அடுத்தவரின் அந்தரங்கத்தைப் பார்க்கும் ஆவல்தான் சபலப்படுபவர்களை இப்படித் தவறு செய்ய வைக்கின்றது. தாழ்ப்பாள் ஓட்டைக்குள் எட்டிப் பார்க்கும் நிலையிலிருந்து முன்னேறி (!) இன்றைய டிஜிட்டல் உலகம் அடுத்தவர் அந்தரங்கத்தை […]

Read More

சென்னையில் கன்னடப் படத்துக்குத் தடை விதித்தபோது ரஜினி எங்கே போனார்..?

by on June 2, 2018 0

கர்நாடகாவில் ரஜினியின் ‘காலா’ படத்தைத் திரையிடக் கூடாதென்று சில அமைப்புகள் கோரி வரும் நிலையில் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி ஆலோசனைகள் வழங்கினார்.. கர்நாடகத்தில் காலா படம் வெளியாகாவிட்டால் அதன் விநியோகஸ்தர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ரஜினி, ‘‘காலா படத்துக்கான எதிர்ப்பைப் பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன். திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்..!” என்றார். ஆனால், கர்நாடக […]

Read More

கர்நாடகாவில் காலா திரையிடக் கூடாதென்பது என்ன நியாயம் – பொன். ராதாகிருஷ்ணன்

by on June 2, 2018 0

கோவை மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள கோவை வந்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதிலிருந்து… “கடந்த 150 ஆண்டு காலத்தில் எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனைக்குத் தீர்வு தந்த பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமையக் கையெழுத்திட்ட நிதின் கட்காரிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி விவகாரத்தில் பயங்கரவாத சக்திகளைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. அந்த […]

Read More

பாலிவுட்டில் கேங்ஸ்டர் ஆகிறார் ஸ்ருதி ஹாசன்..!

by on June 1, 2018 0

மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் புதிய இந்திப்படத்தில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தில் வித்யுத் ஜம்வால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில்தான் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம். ஸ்ருதிஹாசனின் […]

Read More

குண்டடி பட்டவர்கள் சமூக விரோதிகளா… ரஜினி விளக்க வேண்டும் – சீமான்

by on May 31, 2018 0

ரஜினியின் தூத்துக்குடி வருகையை விமர்சித்து நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதிலிருந்து… “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைத் திசைதிருப்பவே அங்கு ரஜினிகாந்த்தை அனுப்பியுள்ளார்கள். அவர் ஆறுதல் கூற வரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் பலியானதற்கு ஆறுதல் கூறவந்த ரஜினிகாந்த் , திறந்த காரில் கைகளை உயர்த்தியபடி ஓட்டு கேட்பது போல் வந்தார். அவர் சமூக விரோதிகள் என்று கூறுவது யாரை? இதற்கு ரஜினி விளக்கம் அளிக்க வேண்டும். ஏராளமான மக்கள் […]

Read More

எங்கள் போராட்டத்தை ரஜினி இப்படி விமர்சித்திருக்க வேண்டாம் – சந்தோஷ்ராஜ்

by on May 31, 2018 0

நேற்று ரஜினியின் தூத்துக்குடி வருகையின்போது அங்கு மருத்துவமனையின் சிகிச்சை பெறும் சந்தோஷ்ராஜ் என்ற வாலிபர் ரஜினியிடம் “நீங்கள் யார்..? எங்கிருந்து வருகிறீர்கள்..?” என்று கேட்ட கேள்வி நேற்று சமூக வலை தளங்களில் வைரலானது. ரஜினியைத் திகைக்க வைத்த அந்தக் கேள்வியைக் கேட்ட சந்தோஷ்ராஜ் பி.காம் பட்டப்படிப்பு படித்தவர்.. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சென்றபோதுதான் ரஜினிக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது. […]

Read More
CLOSE
CLOSE