September 16, 2024
  • September 16, 2024
Breaking News
June 1, 2018

பாலிவுட்டில் கேங்ஸ்டர் ஆகிறார் ஸ்ருதி ஹாசன்..!

By 0 1167 Views

மகேஷ்பாபு மஞ்ரேக்கர் இயக்கும் புதிய இந்திப்படத்தில் ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படத்தில் வித்யுத் ஜம்வால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில்தான் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம்.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்துப் பேசிய இயக்குனர் “ஸ்ருதியுடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..!” என்று தெரிவித்தார். தற்போது, லண்டனில் இருக்கும் ஸ்ருதி, சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்குமாம்.

இந்தப் படப்பிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

சபாஷ்..!

Shruti Haasan

Mahesh Manjrekar, Shruti Haasan, Vidyut Jamwal