January 18, 2025
  • January 18, 2025

திமிரு புடிச்சவன் தீபாவளிக்கு வரும் காரணத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி

by on October 27, 2018 0

சினிமாவைப் பொறுத்தளவில் எல்லாமே ஹீரோதான் என்ற நிலைதான் இன்றும், அன்றும். ‘அப்படி இல்லை’ என்பதை அந்த ஹீரோவே சொன்னால்தான் உண்டு. ஆனால், அவர்களும் அப்படிச் சொல்லாமல் எல்லாப்புகழையும் தாங்களே அறுவடை செய்துகொண்டு போகிறார்கள். இவர்களுள் வித்தியாசமான ஹீரோ விஜய் ஆண்டனி. அவரே நடித்து இசைமைத்திருக்கும் படமான ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் “இயக்குநர்தான் ஒரு படத்தின் ஹீரோ…” என்று சொல்லியதுடன் நிற்காமல் படத்தின் இயக்குநர் கணேஷாவுக்கு ஆளுயர மாலை ஒன்றை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினார். விஜய் […]

Read More

சிம்புவைத் தொடர்ந்து காற்றின் மொழி யில் ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு

by on October 26, 2018 0

‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது. அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதாம். அப்படி என்ன காட்சி..? படத்தில் வானொலி அறிவிப்பாளராக (RJ) நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் […]

Read More

விக்ராந்த் படத்துக்கு திரைக்கதை வசனகர்த்தா ஆகிறார் விஜய்சேதுபதி

by on October 26, 2018 0

விஜய் தம்பி விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்துக்கு விருப்பப்பட்டு திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி. இது விக்ராந்த் நடிக்கவிருக்கும் படத்துக்காக என்பது கூடுதல் தகவல். இவர் தற்போது ‘வெண்ணிலா கபடி குழு 2’, ‘சுட்டு பிடிக்க உத்தரவு’, ‘பக்ரீத்’ என பல படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். விஜய் சேதுபதி வசனகர்த்தா ஆனது குறித்து சஞ்ஜீவ் […]

Read More

வட சென்னை படத்தில் அமீர் ஆன்ட்ரியா காட்சிகள் நீக்கம்

by on October 26, 2018 0

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆன்ட்ரியா நடித்து கடந்த அக்டோபர் 17-ம்தேதி வெளியான வடசென்னை படத்துக்கு மீனவ சமுதாய மக்கள் தரப்பிலிருந்து சில கோரிக்கைகள் விடப்பட்டன. அதில் முக்கியமானது அமீர், ஆன்ட்ரியா இடம் பெற்றுள்ள முதலிரவுக் காட்சி. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சில ஆபாச வசனங்களும் தங்கள் மனத்தைப் புண்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்க, இப்போது அந்தக் காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக […]

Read More

கார்த்தி அப்பா பிரகாஷ்ராஜ் ரகுல் ப்ரீத் சிங் அம்மா ரம்யா கிருஷ்ணன் – தேவ் தகவல்

by on October 25, 2018 0

கார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் முதல் பார்வையை இன்று மாலை சூர்யா வெளியிட்டார். இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸின் எஸ்.லக்ஷ்மண் இப்படத்தைத் தயாரிக்கிறார். ‘தேவ்’ படத்தைப் பற்றி இயக்குநர் ரஜத் ரவிசங்கர் கூறியது கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரம் தோற்றம், காட்சியமைப்புகள் இவற்றை பார்த்த மாத்திரத்திரத்திலேயே அனைவரையும் காதலில் விழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. காதல், ரொமான்ஸ் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்த […]

Read More

எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய படம் துப்பாக்கி முனை – தணிக்கைத் துறை

by on October 25, 2018 0

’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார். ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய […]

Read More

விஜய் ஜெயம் ரவி நடிக்க முடியாமல் போன படம் ஜீனியஸ் – சுசீந்திரன்

by on October 24, 2018 0

தன் படங்களில் சமுதாயம், கல்வி, விளையாட்டு என்று சமூகத்தின் மீதான அத்தியாவசிய அக்கறையுடன் படங்களை எடுத்து வருபவர் இயக்குநர் சுசீந்திரன். இப்போது சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் ‘ஜீனியஸ்’ படத்தை இயக்கியுள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இப்படம் பற்றி சுசீந்திரன் கூறியது… “பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு ஸம்பவம் நடந்தது. ‘ஐடி’ துறையில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்த ஒரு நபர் அதைக் […]

Read More

லீனா மணிமேகலையைத் தொடர்ந்து சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் புகார்…

by on October 24, 2018 0

ஏற்கனவே இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை ‘மீ டூ’ பதிவில் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்த சுசி கணேசன், லீனா மீது வழக்குத் தொடர்வதாக அறிவித்தார். இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் நடிகை அமலாபால் இயக்குநர் சுசி கணேசன் மீதான பாலியல் புகாரைத் தெரிவித்திருக்கிறார். சுசி இயக்கிய ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் அமலா பால். இதுகுறித்து அவர் கூறியது… “திருட்டுப் பயலே 2ம் பாகத்தில் […]

Read More
CLOSE
CLOSE