July 15, 2025
  • July 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிம்புவைத் தொடர்ந்து காற்றின் மொழி யில் ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு
October 26, 2018

சிம்புவைத் தொடர்ந்து காற்றின் மொழி யில் ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு

By 0 990 Views

‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வரும் யோகிபாபு ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று காற்று வழியே செய்தி வந்திருக்கிறது.

அவர் படத்தில் ஜோதிகாவுடன் நடித்திருக்கும் இரண்டு காட்சிகளுமே அரங்கத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறதாம். அப்படி என்ன காட்சி..?

படத்தில் வானொலி அறிவிப்பாளராக (RJ) நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனறாம். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

Kaatrin mozhi Yogibabu

Kaatrin mozhi Yogibabu

BOFTA-வின் சார்பாக ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் உறவினரான ஏ.எம்.காஷிப் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கலையை கதிர் கவனிக்கிறார். உடைகளை பூர்ணிமாவும், பிரவின் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.

ராதா மோகன் இயக்கிய இப்படத்திற்கு பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியிருக்கிறார்.

காற்றின் மொழிக்குக் காத்திருக்கிறோம்..!