April 26, 2025
  • April 26, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய படம் துப்பாக்கி முனை – தணிக்கைத் துறை
October 25, 2018

எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய படம் துப்பாக்கி முனை – தணிக்கைத் துறை

By 0 1031 Views

’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள ‘துப்பாக்கி முனை’ படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய ‘தினேஷ் செல்வராஜ்’ இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

எல்லா வயதினரும் பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருப்பதால் தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது.

சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தத் தணிக்கை சான்றிதழும் படத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.