January 20, 2025
  • January 20, 2025

தேர்வுகள் என்பது பெரிய சவால் அல்ல! – பள்ளி மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு!

by on January 29, 2019 0

மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அதிகம் பகிர வேண்டும். இதற்குப் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் உங்கள் அளவுக்கு மன முதிர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகள் மன வருத்தத் துடன் இருந்தால் அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நல்ல கவுன்சிலிங் எடுக்கத் தயங்காதீர்கள். உங்கள் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒருநாளும் ஒப்பிடாதீர்கள் என்று பெற்றோர்ககளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்! மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது சந்திக்கும் பிரச்சனைகளை களையவும், அவர்கள் வளர்ச்சியை முன்னிறுத்தியும் […]

Read More

அண்டா பால் விவகாரம் – சிம்புவுக்கு பால் முகவர்கள் நன்றி

by on January 28, 2019 0

சில தினங்களுக்கு முன் வெளிவரவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தன் கட்டவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இது குறித்து பால் முகவர்கள் கொதித்துப் போனதுடன், பாலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்க திட்டமிட்டிருந்தனர்.    இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்படதென்று அதற்கு மன்னிப்புக்கேட்டுக் கொண்டார். இதுகுறித்து பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள […]

Read More

வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலரில் சிம்பு பேசும் அரசியல்

by on January 28, 2019 0

சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே நடித்து அது தொடர்பான வசனங்களையே பேசிக்கோண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்போதைய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு […]

Read More

காதலா இவனையா – ஹீரோவிடம் முகம் சுளித்த ப்ரியா வாரியர்

by on January 27, 2019 0

ஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது. மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு […]

Read More

நட்பே துணை 2வது பாடல் சிங்கிள் பசங்க லிரிக்கல் வீடியோ

by on January 27, 2019 0

தன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி பெற்று வரும் ‘ஹிப்ஹாப்’ ஆதி, அவரே நடித்துக் கொண்டிருக்கும் ‘நட்பே துணை’ படத்தில் சமீபத்தில் வெளியிட்ட ‘கேரளா சாங்’ பாடல் வெற்றியடைந்தது.   தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறராம் ‘ஹிப்ஹாப்’ ஆதி.   ‘நட்பே துணை’ […]

Read More

ஒரு மயிரும் இல்ல – மோகன்ராஜா பாராட்டிய குறும்படம்

by on January 26, 2019 0

குறும்படத் தலைப்பே ‘ஒரு மயிரும் இல்ல’தான். ஆனால், டென்ஷனாக வேண்டாம். படமே தலை மயிர் பிரச்சினை பற்றிதான்.    இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். ஒளிப்பதி வு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள்… நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர்.   நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, […]

Read More
CLOSE
CLOSE