March 25, 2025
  • March 25, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலரில் சிம்பு பேசும் அரசியல்
January 28, 2019

வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலரில் சிம்பு பேசும் அரசியல்

By 0 928 Views

சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார்.

அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே நடித்து அது தொடர்பான வசனங்களையே பேசிக்கோண்டிருப்பதை கவனித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

இப்போதைய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திலும் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு போட முடிவெடுத்ததை நக்கலடித்து ஒரு பாடலையே ரெடி பண்ணி சினிமா அரசியலைப் பேசியிருக்கும் அவர், அதைத் தாண்டி “அம்மாவுக்கு அப்புறம் நான்தான்னு பலபேர் நினைச்சுக்கிட்டிருக்காங்க…” என்று நேரடி அரசியலையும் ஒரு பிடி பிடித்திருப்பதை டிரைலர் உணர்த்துகிறது.

வெளியிட்டு 10 மணிநேரத்துக்குள் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்த அந்த டிரைலர் கீழே…