February 13, 2026
  • February 13, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காதலா இவனையா – ஹீரோவிடம் முகம் சுளித்த ப்ரியா வாரியர்
January 27, 2019

காதலா இவனையா – ஹீரோவிடம் முகம் சுளித்த ப்ரியா வாரியர்

By 0 1107 Views

ஒரு கண் சிமிட்டலில் உலகத்தைக் கட்டிப்போட்ட கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிப்பில் உருவான ‘ஒரு அடார் லவ்’. அந்தக் கண்ணசைவுக் காட்சி தந்த எதிர்பார்ப்பு காரணமாகவே தயாரிப்பில் அதீத கவனம் வைக்க நேர்ந்து இந்த காதலர் தினத்துக்கு திரையைக் காண வருகிறது.

மலையாளத்தில் முதலில் தயாரானாலும் படம் இந்தியாவையே ஈர்த்துவிட இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் கலைப்புலி எஸ் .தாணு இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு செல்லையில் நடந்தது. படட்தின் தயாரிப்பாளர் ஔசேபச்சன், இயக்குநர் ஓமர் லுலு மற்றும் படத்தில் நடித்த பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப், நூரின் ஷெரிப், அனீஸ் மேனன் என்று ஒட்டுமொத்த ‘அடார் லவ்’ யூனிட்டும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.

oru adaar love

oru adaar love

அனைத்து மீடியாகளின் கவனமும் ப்ரியா பிரகாஷ் வாரியரின் மேலேயே இருக்க, படமும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாவதால் அனைத்து கேள்விகளும் காதலைக் குறிவைத்தே இருந்தன.

“நீங்கள் காதலித்திருக்கிறீர்களா..?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “காதலைக் கடக்காதவர்கள் யார்..? நான் காதலித்திருக்கிறேன்…” என்ற ப்ரியாவிடம், “உடன் நடிக்கும் ரோஷனைக் காதலிக்கிறீர்களா..?” என்று கேட்கப்பட்டபோது அருகிலிருந்த ரோஷன் பார்வையில் படாமல் கைகளைக் கண்ணுக்கருகில் வைத்துக்கொண்டு “இவனையா..?” என்பதுபோல் முகம் சுளித்து ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார் பாருங்கள்… அந்த ‘க்ளிப்’ இருந்து வெளியிட்டால் வைரல் ஆகலாம்..! 

இந்த வருடக் காதலர் தினக் கொண்டாட்டம், இந்தப் படத்துடன்தான் போலிருக்கிறது..!