January 20, 2025
  • January 20, 2025

ஒரே காட்சியில் விரியும் முழுநீளத் திரைப்படம்

by on February 24, 2019 0

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, […]

Read More

கார்த்தி ஜோடியாக கீத கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மண்டன்னா

by on February 24, 2019 0

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது.’கே19′ (K19) என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் […]

Read More

கமல் ரஜினிக்கு தேவை பணம் எனக்குத் தேவை இனம் – சீமான்

by on February 23, 2019 0

‘தம்பி திரைக்களம்’ மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ […]

Read More

எல்கேஜி திரைப்பட விமர்சனம்

by on February 23, 2019 0

லால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கம்தான் இந்த எல்கேஜி. அந்தப் பாத்திரத்தில் வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அரசியல் விமர்சகரான ‘சோ’ பாணியில் தற்கால அரசியலை நையாண்டியுடன் தூர் வாரி சுத்தப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப்படம். அரசியலுக்குள்ளேயே வாழ்ந்தும் தம்படி தேராமல் வாழ்வை சேதாரப்படுத்திக்கொண்ட தன் அப்பா போல் ஆகிவிடாமல் வெற்றிகரமாக அரசியல்வாதியாக மாற முடிவெடுத்து ஏரியா கவுன்சிலராகும் ஆர்ஜே பாலாஜி, அதே தகிடுதித்த வேலைகளால் எப்படி மாநில முதல்வர் வரை உயர்ந்தார் என்று சொல்லும் கதைதான் […]

Read More

ஒரு நாளுக்குள் 27 லட்சம் பார்வைகள் கடந்த சூப்பர் டீலக்ஸ் டிரைலர்

by on February 23, 2019 0

தமிழ் சினிமாவின் நவீன  டிரெண்ட் செட்டர்களில் முக்கியமானவர் இயக்குநர் ‘தியாகராஜன் குமாரராஜா’. வணிகத்துக்கு விலை போகாமல் சினிமாவின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் இவரது முதல் படமான ‘ஆரண்ய கண்டம்’ விமர்சகர்களால் பெருமளவு பாராட்டுகளைப் பெற்று இன்றைய நவீன படமாக்கலுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. அடுத்த இவரது படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு எட்டு வருடங்களுக்குப் பின் பதில் கிடைத்திருக்கிறது. அவர் இப்போது இயக்கி வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க முடிவானதுமே சினிமா […]

Read More

ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்த பின்னணி

by on February 22, 2019 0

இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சாலிகிராமத்தில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் விஜயகாந்தின் தேமுதிக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்து வருகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சந்தித்திருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இந்த சந்திப்பில் கொஞ்சம் கூட அரசியல் இல்லையென்றும், தான் உடல்நிலை […]

Read More

டு லெட் திரைப்பட விமர்சனம்

by on February 22, 2019 0

உங்களுக்கு, எனக்கு ஏன் எல்லோருக்குமே தெரிந்த ஊரறிந்த… உலகறிந்த கதைதான். மனிதனின் அவசியத் தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றில் மத்திய மற்றும் அதற்கும் கீழான நடுத்தர வர்க்கத்தின் நிலை எப்போதும் மோசம்தான். அதிலும் அடுத்தவரை நம்பியிருக்கும் வாடகை வீட்டுப் பிரச்சினை அலாதியானது. அதை இயல்பு கெடாமல் துயரங்களைத் துருத்தாமல் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் செழியன் பாராட்டுக்குரியவர். அத்துடன் நில்லாமல் 32 உள்நாட்டு, வெளிநாட்டுப் பட விழாக்கள் பாராட்டி விருது வழங்கியிருப்பதே அதற்குச் சான்று. அந்தப் […]

Read More

குண்டு வெடிப்பு கதையில் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்

by on February 21, 2019 0

‘ஜெய்’ நடிப்பில் உருவாக உள்ள புதிய படமான ‘பிரேக்கிங் நியூஸ்’ தொடக்கவிழா சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸ் நடைபெற்றது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களில் பணிபுரிந்த கிராபிக்ஸ் வல்லுனரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்க உள்ள இந்த படத்தை ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிக்கிறார். படத்தின் நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா […]

Read More
CLOSE
CLOSE