January 24, 2025
  • January 24, 2025

முழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்

by on August 29, 2019 0

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து… “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. […]

Read More

பப்பி தயாரிப்பாளருக்கு நித்தியானந்தா நோட்டீஸ்

by on August 28, 2019 0

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘முரட்டு சிங்கிள்’ இயக்க, யோகி பாபு, வருண் நடிக்க தயாராகும் ‘பப்பி’. இதன் போஸ்டர் ஒன்றை ஆகஸ்ட் 15-ல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டார்கள். அந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் நித்தியானந்தாவும், இன்னொரு பக்கம் நீலப்பட நாயகன் ‘ஜானி சிம்ஸி’ன் படமும் இடம் பெற்றிருந்தது.    அந்தப்படம் குறித்த போஸ்டருக்கு நித்தியானந்தாவின் லீகல் டீம்  தன் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.   ஏற்கனவே இந்தப் போஸ்டர் தொடர்பாக படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி […]

Read More

நடிகை அண்ணா என்று அழைத்ததால் அண்ணன் ஆனேன்

by on August 27, 2019 0

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ள ‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் . விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது நெகிச்ழ்சியான ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் பேச்சிலிருந்து… “இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா […]

Read More

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

by on August 27, 2019 0

விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…   “கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், […]

Read More

கிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்

by on August 26, 2019 0

‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.  பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.  அவர் பயில்வான் படத்தின்  பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த […]

Read More

தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி

by on August 26, 2019 0

கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் […]

Read More

மெய் திரைப்பட விமர்சனம்

by on August 25, 2019 0

மருத்துவ உலகம் மெல்ல மெல்ல மாபியாக்களின் கைகளில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கூற்று இப்போது பரவலாகவே பொதுமக்களால் விவாதிக்கப்படுகிறது. அதை மெய்ப்படுத்துவதைப் போலவே அங்கங்கே வானளாவ உயர்ந்து நட்சத்திர விடுதிகள் போல் தொற்றமளிக்கும் தனியார் மருத்துவமனைகளும் நம்மை மகிழ்விப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் அதிர்ச்சியளிக்ககூடிய மருத்துவ உலகின் ஒரு விஷயம் தொட்டுக் கதை சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன். ‘மெய்’ என்றால் தமிழில் ‘உடல்’ எனவும், ‘உண்மை’ என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. இந்த இரண்டையும் ஒன்று […]

Read More
CLOSE
CLOSE