August 18, 2026
  • August 18, 2026

கால் டாக்ஸி டிரைவராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

by on April 14, 2021 0

ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் […]

Read More

வெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்

by on April 13, 2021 0

888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘சாந்தி செளந்தரராஜன் – சூரியஒளிப் பெண்’ திரைப்படம் பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கியது. 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையான சாந்தி செளந்தரராஜன் வாழ்வை எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி. குறிப்பிடத்தக்க வகையில், சாந்தி செளந்தரராஜனும் மதுரை மாவட்டத்தின் ADSP-ஆன S.வனிதா ஆகியோர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர்.

Read More

கர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்

by on April 13, 2021 0

உலகமெங்கும் வெளியாகி சக்கை போடு போட்டுக் கண்டிருக்கும் கர்ணன் படத்தை நடிகரும் சட்டமன்ற வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பார்த்து அந்த படத்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்த இன்னொரு பதிவில் படத்தில் இடம்பெற்றுள்ள உண்மை சம்பவம் நடந்தபோது அதிமுக ஆட்சி இருந்தது. ஆனால் படத்தில் திமுக ஆட்சி நடப்பதை போன்ற சித்தரிக்கப்பட்டுள்ளது இதனை சரி செய்ய வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கேட்டுக் கொண்டேன். அவர்களும் இரு […]

Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை

by on April 12, 2021 0

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர […]

Read More

ரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்

by on April 11, 2021 0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் ‘மருந்தும், மந்திரமும்’ பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் செய்தால், இதன் பாதிப்பிலிருந்து உலக மக்கள் விரைவில் விடுதலை பெறலாம். ஆனால் இதனை நடத்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும், பாரத பிரதமரும், ஹிந்து அமைப்புகளும் முன்வரவில்லை என சூரியன் நம்பூதிரி சுவாமிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்.உலகையே […]

Read More

நயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்

by on April 10, 2021 0

வருடத்திறகு இரண்டு முறையாவது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஊர் மற்றும் உலகம் சுற்றி வரும் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி விடுகின்றன. இந்த வருட வீடியோவாக தங்களது இருக்கமான வேலைகளுக்கு இடையே ஒரு விடுமுறையாக விஷூ பண்டிகைக்காக நயன்தாராவின் சொந்த ஊரான கொச்சி புறப்பட்டுச் சென்றார்கள். வழக்கம்போல தனி விமானத்தில்தான் அவர்களது பயணம் அமைந்தது. இங்கே கிளம்பியதிலிருந்து அங்கே சென்று சேரும் வரை வழியெல்லாம் பார்ப்பவர்கள் புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டார்கள். அவற்றில் சில கீழே…  

Read More

கர்ணன் படத்தின் திரைவிமர்சனம்

by on April 10, 2021 0

செவி வழியாகச் சொல்லப்பட்டுக் காலத்துக்கும் கடத்தப்படும் கதைகளை ‘கர்ண பரம்பரைக் கதைகள்’ என்பார்கள். ஆனால், இந்தப்படத்தின் ‘கர்ணன்’ கதை நம் காலத்தில் நம் கண் முன்னே நடந்து முடிந்த ஒரு இனப் போராட்டத்தை முன் வைக்கிறது.  அதற்கு அழுத்தம் சேர்த்தவை ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜும், நடிப்பு ‘அசுரன்’ தனுஷும், அசுரனைச் சாத்தியமாக்கிய கலைப்புலி எஸ்.தாணுவும் அடுத்து கைகோத்த படம் இது என்பதே. கதை நடக்கும் ஊருக்குப் ‘பொடியன் குளம்’ என்று பெயர் வைத்திருப்பதிலேயே மாரி […]

Read More

அதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

by on April 8, 2021 0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து  இருக்கிறது. முக்கியமாக மராட்டியம்், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் […]

Read More

பொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி

by on April 7, 2021 0

சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது… நடிகர் கார்த்தி – “இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் […]

Read More

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்

by on April 7, 2021 0

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ‘தமிழ் டாக்கீஸ்’ ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். […]

Read More
CLOSE
CLOSE