March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லஷ்மியை இரிட்டேட் செய்த விஷயம்
September 24, 2021

சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லஷ்மியை இரிட்டேட் செய்த விஷயம்

By 0 333 Views

எஸ்.ஐ.புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி நாயகியாக வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. 

இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடினர். 

அதைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா –

“கபிலன் வைரமுத்து மற்றும் என் மனைவி ஜெயந்தி எழுதியது என படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தில் ராய் லக்ஷ்மி மற்றும் சாக்ஷி ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக வந்துள்ளது..!”

ஒளிப்பதிவாளர் ராமி –

“யாமிருக்க பயமே’ படத்துக்குப் பிறகு இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படக் குழுவினருடன் நான் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.’சிண்ட்ரெல்லா’ தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவமாக இருக்கும்..!”

நடிகை சாக்ஷி அகர்வால் –

“இயக்குநர் வினூ கதையை விவரித்தபோது, அடுத்த காட்சி என்ன என்று நான் பரபரப்படைந்தேன். அடுத்த காட்சி கேட்பதற்கு நான் மிகவும் ஆவலாக இருந்தேன். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாகக் கதை சொன்னார்.நான் வில்லியாக நடிக்கப் போகிறேன் என்று இயக்குநர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது…”

நடிகர் அன்பு தாசன் –

“இயக்குநர் வினூ உண்மையில் ஒரு அற்புதமான நபர். நாங்கள் பல திரைக்கதைகளை விவாதித்து இருக்கிறோம். அப்போதே மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.நடிகை ராய் லட்சுமியின் எளிமையும் பெருந்தன்மையும் கண்ணியத்தையும் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன்..!”

நடிகர் ரோபோ சங்கர் –

“இயக்குநர் வினூ என்னை அழைத்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து நடிப்பீர்களா என்றார். நான் அந்த வேடத்தில் நடிப்பேனா என்று சந்தேகம் அவருக்கு. அது ஒரு நல்ல வித்தியாசமான வேடம் தான். சிண்ட்ரெல்லா நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் ரசிக்க ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். ராய் லக்ஷ்மி ஒரு அழகான நடிகை மட்டுமல்ல, நல்ல உள்ளம் கொண்டவர்..!”

நடிகை ராய் லக்ஷ்மி –

“சிண்ட்ரெல்லா’ ஒரு திகில் பேண்டஸி படம். இது வித்தியாசமான ஹாரர் படம். காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன.

ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் வினூ என்னை அணுகியபோது அதே வகை, என்றாலும் சிண்ட்ரெல்லா என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன். சிண்ட்ரெல்லா என்ற பெயரை தேவதைக் கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன்.

ஆனால் அதையே ஒரு திகில் படமாகக் கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார் ,மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. . இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை . ஆனால் மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது. 

போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக அவர் விளக்கினார். வேலைக்காரி வேடமும் நான்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொன்ன போது நான் ஒரு கணம் தயங்கினேன். மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் அவர் என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார்.

படக்குழுவினரின் ஒன்றுபட்ட உழைப்பின் பலனாக இந்த படம் வந்திருக்கிறது. சிண்ட்ரெல்லாவின் வெற்றிக்குப்பின் வினூவின் கடின உழைப்புதான் அடிப்படையாக இருக்கும் .

சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த சம்பந்தப்பட்ட பாத்திரம் சவாலானது. பல நேரங்களில், அந்தக் கவுனை அணிந்து நடிப்பது இரிட்டேட்டாக இருந்தது. படம் பார்க்கும்போது அந்த சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது.

ரோபோ சங்கருடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவை.பல காட்சிகளை மேம்படுத்த அவர் உதவினார். இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம். அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது.க

இயக்குநர் வினூ பலவகை திறமைகள் கொண்ட இளைஞர். அவர் தொழில்நுட்ப ரீதியாகவும் அறிந்து வைத்துள்ளார். இசை அறிவும் கொண்டவர்..!”

இயக்குநர் வினூ வெங்கடேஷ் பேசும்போது,

“என் மீது நம்பிக்கை வைத்து ராய் லக்ஷ்மி அவர்கள் இந்த படத்திற்கு அருமையாக நடித்துக் கொடுத்துப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார். அவரது ஆதரவும் நம்பிக்கையும் இல்லையென்றால், இப்படம் எந்த அளவிற்கு வந்து இருக்குமா தெரியாது.

அடுத்து நான் நன்றி சொல்ல விரும்புவது ரோபோ சங்கர். அவர் பொதுவாக இந்த மாதிரியான வாய்ப்புகளை ஏற்கமாட்டார். 10-க்கும் குறைவான நாட்கள் கால்ஷீட், ஆனால் அவர் இந்த படத்தில் எனக்காக நடித்து உதவினார்.

சாக்ஷி வில்லி வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா ஒரு வழக்கமான திகில் படமாக இருக்காது. இதுவரை பார்த்த திகில் படங்களில் திரும்பத் திரும்ப காட்டப்பட்டுள்ள சலிப்பூட்டும் விஷயங்கள் இதில் நிச்சயமாக இருக்காது.

பேய்களை வைத்து நாங்கள் காமெடி செய்யவில்லை. பேய்களை மரியாதையாகத்தான் காட்டி இருக்கிறோம்..!”