January 29, 2026
  • January 29, 2026

கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் திரைப்படம் ‘சரீரம்..!’

by on September 12, 2025 0

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!  G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, […]

Read More

குமார சம்பவம் திரைப்பட விமர்சனம்

by on September 12, 2025 0

சமுதாயத்துக்காகப் போராடும் சமூக போராளியான குமரவேல் இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அவரைக் கொன்றது யார் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்க குமரவேல் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் (நாயகன்) குமரன் தங்கராஜன் விசாரணைக்கு உட்படுகிறார்.  போலீஸ் விசாரணையில் அவர் சொல்லும் கதைகள்தான் பிளாஷ்பேக்காக விரிகின்றன.  அதில் குமரவேலின் கதையும், குமரனின் கதையும் ஒரு சேர காட்சிப்படுத்தப்படுகின்றன.  குமரவேல் ஒரு சமூக போராளி என்பதால் நிறைய சமூகவிரோதிகள் மற்றும் பணக்காரர்களின் பகைமையை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர்கள் மேல் […]

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நவ’ரசவாதி’ அர்ஜுன் தாஸ்..!

by on September 12, 2025 0

திரையில் முகத்தைப் பார்த்ததுமே கைத்தட்டலும் விசிலும் பறக்க வேண்டும் என்றால் அது மக்களிடம் அபிமானம் பெற்ற நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அந்த சாத்தியத்தை சமீபகாலமாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். ’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டிய அர்ஜுன் தாஸ், பின்னர் நாயகனாகி போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’யில் மிரட்டினார். அவை அனைத்துமே ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைகளைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘தலை’ க்கே வில்லனாக […]

Read More

வடபழனி காவேரி மருத்துவமனையின் ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ – இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை

by on September 11, 2025 0

வடபழனி காவேரி மருத்துவமனையில் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்காக ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற இலவச நடமாடும் நுரையீரல் மருத்துவமனை ஆரம்பம்..! சென்னை, 11 செப்டம்பர் 2025: -தென்னிந்தியாவின் முன்னணி பன்முக மருத்துவ சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, நடமாடும் நுரையீரல் மருத்துவமனை’ எனும் புதுமையான முயற்சியைப் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. இது நீண்டகால நுரையீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் மற்றும் […]

Read More

பிளாக் மெயில் திரைப்பட விமர்சனம்

by on September 11, 2025 0

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும்.  அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம்  மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது […]

Read More

காயல் திரைப்பட விமர்சனம்

by on September 11, 2025 0

கடலிலிருந்து பெருகி வந்த உபரி நீர் மீண்டும் கடலுக்குச் செல்லாமல் தங்கிவிடும் பரப்பை காயல் என்பார்கள். அந்த நீர் கடலைப் போல் அலைகளை எழுப்பி ஆர்ப்பரிக்காமல் அமைதியாக இருக்கும்.  அதனைப் போல ஒரு தேவையற்ற பிடிவாதத்தில் ஆர்ப்பரித்து இயல்பை இழந்த ஒரு குடும்பம் எப்படி உணர்ச்சிகள் அற்றுப் போகிறது என்பதைச் சொல்லும் படம் இது. இதை எழுத்தாளர் தமயந்தி, தன் எழுத்துக்களுடன் இயக்கியிருப்பதிலும் கவனம் பெற்ற படமாக அமைகிறது.  கடல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாயகன் லிங்கேஷ், […]

Read More

படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது..! – கவிப்பேரரசு வைரமுத்து

by on September 9, 2025 0

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார்..! இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், […]

Read More

உருட்டு உருட்டு திரைப்பட விமர்சனம்

by on September 9, 2025 0

மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால், இதுவரை வந்த இந்திய சினிமாக்களில் பணக்காரர் வீட்டுப் பெண்ணை ஏழை வீட்டுப் பையன் காதலித்தால் என்ன ஆகும்? பெண்ணின் அப்பா அந்தக் காதலைப் பிரித்துவிடுவார். அதிலும் அந்தப் பையன் தாழ்த்தப்பட்ட சாதி என்றால்..? அவனைக் கொன்று விடுவார். அதுதானே..? ஆனால், இந்திய சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலேயே புதிதாக ஒரு கிளைமாக்ஸைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சதாசிவம். ஆனால், இந்த புதுமையான முடிவைக் கொண்ட கதையை ரசிக்கும்படி எடுத்திருக்கிறாரா என்பதுதான் […]

Read More

எம்ஜிஆர், ஜெ வழியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன்..! – செங்கோட்டையன்

by on September 6, 2025 0

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், ” தர்மம் தழைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டி நேற்று கருத்தை வெளிப்படுத்தினேன். அதனால் கழகத்தில் இருந்து நீக்கியதற்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன். நான் சொல்வதை […]

Read More

‘பேபி கேர்ள்’ (Baby Girl) திரில்லரில் இருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்..!

by on September 6, 2025 0

*அதிரடி திரில்லர் “பேபி கேர்ள்” (Baby Girl) படத்திலிருந்து, நிவின் பாலியின் புதிய அதிரடி லுக் வெளியாகியுள்ளது !!* மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.  புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. […]

Read More
CLOSE
CLOSE