September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யு டியூபுக்கு வருகிறார் பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே
October 8, 2019

யு டியூபுக்கு வருகிறார் பாரதிராஜா என் இனிய தமிழ் மக்களே

By 0 754 Views

இன்றைய தகவல் தொடர்புச் சாதனங்களின் மூலம் யாரும் யாரையும் எப்போதும் தொடர்பு கொள்ளவும், தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது.

அந்த வகையில் யு டியூப் சேனல்கள் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில் முகம் பார்த்து செய்திகளை அறிந்துகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் வருமானமும் உண்டு என்று கூடுதல் சிறப்பாக இருக்க, பலரும் இப்போது யு டியூப் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதில் இப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் இணைகிறார். என் இனிய தமிழ் மக்களே என்ற யு டியூப் சேனல் மூலமாக இனி அவர் மக்களுடன் உரையாட இருக்கிறார். அதில் சினிமா, அரசியல் என்று பாரதிராஜாவின் பன்முகங்களையும் அறிய வாய்ப்பிருக்கிறது.

சினிமாவில் ஜெயித்தவர் மீடியாவில் ஜெயிக்கிறாரா பார்க்கலாம்… அந்த அறிவிப்பு கீழே…