October 16, 2025
  • October 16, 2025
Breaking News
March 28, 2022

சூர்யா நடிக்க பாலா இயக்கும் படம் தொடங்கியது

By 0 944 Views

18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலா-சூர்யா கூட்டணி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் இன்று பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அவரது 2டி நிறுவனத்தின் 19 வது பெருமை மிக்க படைப்பாகும். இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களனில் பாலா உருவாக்கியிருக்கியுள்ள இப்படத்தில் சூர்யா ஏற்றுள்ள பாத்திரம் இதுவரை தமிழ் சினிமா காணாத ஒன்றாகும். சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கிரித்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி. எடிட்டர் சதீஷ் சூர்யா.

இந்த புதிய பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா… ‘ மீண்டும் பாலா சாரின் ‘ஆக்க்ஷன்’ சப்தத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு கேட்க துவங்கியதால் பெரும் மகிழ்ச்சி. வேண்டும் உங்கள் ஆசிகள்’ என்று பதிவிட்டுள்ளார்.