July 27, 2024
  • July 27, 2024
Breaking News
June 6, 2024

BAD BOYS: RIDE OR DIE ஆங்கிலப் பட விமர்சனம்

By 0 99 Views

போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான முதல் ‘Bad Boys’ 1995ல் வெளியானது. அதுவே ‘பேட் பாய்ஸ் 2 மற்றும் மூன்றாவது பாகங்களைத் தந்தது.

இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர்.

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இப்போது வெளியாகியுள்ள ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்!

நான்காவது பாகம் என்பதால் முந்தைய படங்களை விட நான்கு மடங்கு அதிரடி மற்றும் நான்கு மடங்கு பொழுதுபோக்கு என்ற அளவில் தயாராகி, இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவது இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டமான விஷயம்.

உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர்.

கடந்த பாகங்களில் மியாமியின் மிகச் சிறந்த துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர்.

இம்முறை அவர்கள் காவல்துறையினாலேயே துரத்தப்படுகின்றனர். ஏன்..?

மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை இவர்களுக்கு எதிராகவே திரும்ப, வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

பின்னர் தங்களை நிரூபிக்க அவர்கள் எவ்வாறு போராட வேண்டி உள்ளது என்பதை மீதிப்படம் சுவாரஸ்யம் குன்றாமல் இட்டுச் செல்கிறது.

Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith ​​with Tiffany Haddish and Joe Pantoliano உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர்.

முதல் பாதியை விட இரண்டாவது பாதை றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது. குறிப்பாக பற்றி எரியும் காரில் நாயகர்கள் இருவரும் தப்பிச் செல்வதும், பறக்கும் ஹெலிகாப்டர் விமானியின்றி தள்ளாட அதனுள் நடக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கி கொண்டு வரும்.

ஹாலிவுட் படங்களுக்கே உரிய, வசனம் நெடுகிலும் பேசப்படும் கெட்ட வார்த்தைகள் முகம் சுளிக்க வைக்கின்றன.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX -லும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிட்டுள்ளது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.

காமெடி ஆக்ஷன் பிரியர்களுக்கு கோடை மழை விருந்து..!