July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நாங்கள் மாற்று அரசியலை முன்னெடுப்பது ஏன்? – சீமான்

by on March 30, 2021 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தில் தீய ஆட்சியை வழங்கியுள்ளன. அதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி தூய அரசியலை முன்னெடுக்கவே நாம் தமிழர் கட்சி உருவானது. இலவசங்களை கொடுத்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர். இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். அதற்காக மாற்று அரசியலையே நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். அரசு பள்ளிகள், […]

Read More

கொரோனா பரவல் – தமிழகத்தில் ஏப் 6க்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள்

by on March 30, 2021 0

தமிழ்நாட்டில் நேற்று 2,279 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னை மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 7,960 பேரும், தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டடும் 9 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டும் உள்ளது. கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாவதை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய […]

Read More

இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்

by on March 28, 2021 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார். இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..   “கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டார். “மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் மீன்பிடிக்க கற்றுகொடுப்பது சிறப்பானது” என்கிறகொள்கையுடையவன்நான்.   […]

Read More

காடன் படத்தின் திரை விமர்சனம்

by on March 26, 2021 0

தன் ‘மைனா’ படம் முதலே காடுகளின் காதலனாகிப் போன இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் தன் குழுவினருடன் காட்டுக்குள்ளேயே சென்று படம் பிடித்து வந்திருக்கிறார். காட்டுக்குள் அவர் பெற்ற அனுபவங்களின் வாயிலாக இந்த முறை காட்டின் அகலமும், நீளமும் அவருக்கு நன்றாகவே கை வந்திருப்பதாகக் கொள்ள முடிகிறது. காடுகளின் அவசியத்தையும், காடுகளில் மனிதர்களின் பிரவேசத்தால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், வனமும், வன விலங்குகளும் அழிவதால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தையும் இந்தப்படம் மூலம் அபாய அறிவிப்பாக […]

Read More

பண்டாரத்தி புராணம் மாற்றப்பட்டது – மாரிசெல்வராஜ் அறிக்கை

by on March 25, 2021 0

அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக […]

Read More

அரசியலுக்கு வந்ததால் 300 கோடியை இழந்தேன் – கமல்ஹாசன்

by on March 23, 2021 0

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு தலைமை தாங்குகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். அதற்காக கோவை தொடங்கி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் […]

Read More