அசுரன் படம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்ததால் வெளியாகி இரண்டாவது வாரம் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இடையில் படத்தில் வரும் ஒரு வசனத்தை நீக்க முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து அந்த வசனம் நீக்கப்பட, அதைத் தவிர படம் எந்த ஒரு அரசியல் பிரச்சினையையும் கிளப்பாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடியில் அசுரன் படத்தைத் தியேட்டரில் சென்று பார்த்தார் திமுக தலைவர் முக ஸ்டாலின். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக, தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
#Asuran – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும்
-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும்
-வுக்கும் பாராட்டுகள்
ஆனால், மேற்படி ஸ்டாலினின் ட்விட்டர் செய்திக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில்…