April 20, 2024
  • April 20, 2024
Breaking News
February 3, 2019

ஏ.ஆர்.ரஹ்மான் நோட்ஸை திருத்திய இசைஞானி வீடியோ

By 0 964 Views

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான இசை விழாவான ‘இளையராஜா 75’ முதல்நாள் விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதில் ஹைலைட்டாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு அமைந்தது. அவர் இளையராஜா குறித்துப் பேசியதிலிருந்து…

“என்னுடைய தலைமை ஆசிரியர் இளையராஜா. அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றாலே கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால், இளையராஜாவைப் பார்த்து இப்படியும் இருக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன்.

A.R.Rahman, Ilaiyaraja

A.R.Rahman, Ilaiyaraja

எங்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே கெட்ட பழக்கம் இசை தான். நான் ஆஸ்கார் விருது பெற்றதும் இளையராஜாவின் பாராட்டு தான் மகிழ்ச்சியளித்தது. ஏனென்றால், மேதைகளிடம் இருந்து எளிதில் பாராட்டுக்கள் வராது. அப்படி வந்தால் அது உண்மையான திறமை இருந்தால்தான் வரும். அவரிடம் இருந்து பாராட்டு வந்தது மகிழ்ச்சி..!”

இளையராஜா பேசும்போது, “ஏ.ஆர்.ரஹ்மான் அவர் அப்பாவிடம் இருந்ததை விட என்னுடன் இருந்த நேரம்தான் அதிகம். கிட்டத்தட்ட 500 படங்களில் என்னுடன் பணியாற்றியிருக்கிறார்..!” என்றார்.

மேலும், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் இசைக்க இளையராஜா பாடினார். அவர பாடியதும், ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்ததும் பொருந்திப் போகாமலிருக்க, தனது வழக்கப்படியே ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்த நோட்ஸை திருத்தவும் செய்தார்.

அந்த வீடியோ காண கீழே இருக்கும் ‘இன்ஸ்டாகிராம் லிங்க்’கைச் சொடுக்கிப் பார்க்கவும்…